Potato Face Pack in Tamil
வணக்கம் நண்பர்களே. வெள்ளையாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொருவருமே தங்களை அழகுபடுத்தி கொள்ள விரும்புகின்றார்கள். ஏனென்றால் அழகுப்படுத்தி கொள்வது என்பது ஸ்டைலுக்காக மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொருவருமே தங்களின் முகத்தை அழகாகவும் பொலிவுடனும் வைத்திருக்க வேண்டும் என்று பல கிரீம்களை முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதெல்லாம் ஏதோ ஒரு வகையில் முகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே முகத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு வைத்து எப்படி முகத்தை பொலிவாக்குவது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Potato Face Pack at Home in Tamil:
உருளைக்கிழங்கு பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு சாறு- 2 ஸ்பூன்
- முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள்- 1/4 ஸ்பூன்
- பால் பவுடர்- 1 ஸ்பூன்
- பால்- 2 ஸ்பூன்
முல்தானி மெட்டியுடன் இந்த 2 பொருளை மட்டும் கலந்து போட்டால் போதும் கருமையான முகத்தையும் வெள்ளையாக மாற்றலாம்..! |
How to Use Potato Juice on Face in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி விட்டு அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள். பிறகு சீவிய உருளைக்கிழங்கை நன்றாக பிழிந்து சாறை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
இப்பொழுது ஒரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சள், முல்தானி மெட்டி மற்றும் பால் பவுடர் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.
ஸ்டேப்: 3
இரண்டு நிமிடம் கழித்து, நாம் பிழிந்து வைத்த உருளைக்கிழங்கு சாறை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உருளைக்கிழங்கு பேஸ் பேக் தயார் ஆகிவிட்டது.
முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும். |
அப்ளை செய்யும் முறை:
முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவி துடைத்து விட்டு, பின்பு இந்த உருளைக்கிழங்கு பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு தண்ணீர் விட்டு முகத்தை கழுவி விடுங்கள்.
இந்த பேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை போட்டு வந்தீர்கள் என்றால் உங்கள் முகம் வெண்மையாகவும் பொலிவாகவும் மாறுவதை நீங்களே பார்க்கலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |