உருளைக்கிழங்கு கூட சருமத்தை பாதுகாக்கிறதா..?

Advertisement

உருளைக்கிழங்கு அழகு குறிப்பு..!

தினமும் அன்றாட சமையலுக்கு அதிகளவு பயன்படுத்த கூடிய கிழங்கு தான் உருளை. இது சரும பராமரிப்புக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் அதிகளவு பயன்படுகிறது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள்  கருவளையம், வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு, வறண்ட சருமத்திற்கு, கரும்புள்ளிகளுக்கு, கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ஆயில் சருமத்திற்கு என அனைத்து பிரச்சனைகளுக்கும் (potato face pack) உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

சரி வாங்க உருளைக்கிழங்கை சருமத்தில் எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பக்கத்தில் நாம் காண்போம்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

உருளைக்கிழங்கு அழகு குறிப்பு – கருவளையத்திற்கு:

கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சனைக்கு உருளைக்கிழங்கு தீர்வாகிறது. உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை குளிர்ந்த நீரில் ஒரு மணிநேரம் வரை ஊறவைக்கவும்.

பின்பு இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை உங்கள் கண்களில் வைத்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரம் வரை செய்து வந்தால் கருவளைய பிரச்சனை சரியாகும்.

வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:

சிலருக்கு வெயிலின் தாக்கத்தினால் சருமம் மிகவும் கருப்பாக இருக்கும். அவர்களுக்கான டிப்ஸ் தான் இது. உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு காட்டன் பஞ்சி எடுத்து கொண்டு, இந்த சாறில் நனைத்து உங்கள் முகத்தில் தேய்க்கவும். பின்பு 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ, வெயில் தாக்கத்தினால் ஏற்பட்ட கருமையான சருமம், பொலிவுடன் காணப்படும்.

வறண்ட சருமத்திற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:

வறண்ட சருமத்திற்கும் உருளை கிழங்கு (potato face pack in tamil) தீர்வாகிறது. அதாவது உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி 40 நிமிடம் வரை காத்திருந்து.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும்.

முகப்பொலிவிற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:

சிலருடைய முகம் என்ன தான் மேக்கப் போட்டாலும், பொலிவிழந்து காணப்படும்.

அவர்கள் இந்த உருளைக்கிழங்கை  நன்றாக அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி (potato face pack in tamil) சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ சருமம் சைனிங்கா இருக்கும்.

மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:

சிலருக்கு கண்களில் வீக்கங்கள் ஏற்படும் அப்போது உருளைக்கிழங்கை அரைத்து, அதனுடன் இரண்டு ஸ்பூன் வெள்ளரிச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கண்களில் ஏற்படும் வீக்கங்கள் சரியாகும்.

கரும்புள்ளி பிரச்சனைகளுக்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:

பலருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனைதான் கரும்புள்ளி. அதற்கு சிறந்த டிப்ஸ் இதோ.

உருளைக்கிழங்கு சாறுடன், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில், இந்த கலவையை தடவி 15 நிமிடம் வரை வைத்திருந்து, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கரும்புள்ளி பிரச்சனை சரியாகும்.

சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் பிரச்சனைக்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:

சிலருக்கு சிலநேரங்களில் சருமத்தில் அரிப்பு அல்லது எரிச்சல் பிரச்சனை ஏற்படும் அப்போது (potato face pack in tamil) உருளைக்கிழங்கு சாறுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் பிரச்சனை சரியாகும்.

ஆயில் சருமத்திற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:

சிலருக்கு சருமத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும். இதன் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இனி கவலை வேண்டாம். இதற்கு(potato face pack in tamil) உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

உருளைக்கிழங்கு சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும், பின்பு இவற்றை ஒரு காட்டன் பஞ்சியில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும்.

பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவுடன் காணப்படும்.

கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..!
 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement