வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முயல் ரத்த எண்ணெயை தடவினால் முடி வளருமா

Updated On: September 2, 2025 6:13 PM
Follow Us:
rabbit blood hair oil benefits in tamil
---Advertisement---
Advertisement

Rabbit Blood Hair Oil Benefits in Tamil for Hair Growth

தலை முடி பிரச்சனை என்பது ஆண்கள் பெண்கள் என இருவருமே சந்திக்கின்ற பிரச்சனையாக இருக்கிறது. இதற்காக பலரும் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு நன்மைகளை கொடுத்தாலும் நாளடைவில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் முயலின் இரத்தமானது முடிக்கு என்ன நன்மைகளை கொடுக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கண் எரிச்சல்:

முயல் ரத்தம் தடவினால் முடி வளருமா

முயல் இரத்த எண்ணெயை பயன்படுத்துவதால் கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்கிறது. மேலும் கண்களின் திறனை மேம்படுத்துகிறது. பெரும்பாலானவர்களுக்கு உடல் சூட்டினால் முடி உதிர்வு ஏற்படும். அதனால் இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. இதனால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகிறது.

சத்துக்கள்:

முடி வளர்ச்சிக்கு நாம் அதற்கான உணவுகளையும் எடுத்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயில்  முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களான லைசின், மெத்தியோனின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

பொடுகு:

முயல் ரத்தம் தடவினால் முடி வளருமா

முடி உதிர்விற்கு உடல் சூடு மற்றும் உணவு முறை ஒரு காரணமாக இருந்தாலும் இன்னொரு முக்கிய காரணமாக இருப்பது தலையில் உள்ள பொடுகு தான். தலையில் பொடுகு அதிகமாக இருந்தாலும் தலை முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். முயல் இரத்தம் எண்ணெயானது பொடுகு பிரச்சனையையும் சரி செய்கிறது.

வெள்ளை முடி:

நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் வயதானால் கூட இளநரை வராமல் முடியை கருக்கருன்னு வைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இளைஞர்களே நரை முடியை பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு பயனளிக்கும் வகையில் முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயானது உதவுகிறது.

வேர்க்கால்:

rabbit blood hair oil benefits for hair growth in tamil

இந்த முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவதால் முடியின் வேர்க்கால்களை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. முடியின் நுனிப்பகுதி உடைந்து போவதையும் தடுக்கிறது.

முடி பளபளப்பு:

முடி பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம், அதற்காக கடையில் விற்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முடி பளபளப்பாக இருக்கும். ஆனால் நாளடைவில் முடியின் பளபளப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் இயற்கையான முறையை பின்பற்றுவது நல்லது. முயல் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை அப்பளை செய்வதன் மூலம் முடி பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

முடி வளர்ச்சி:

இந்த எண்ணெயில் உதவ கூடிய லைசின், மெத்தியோனின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் முடியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. முடி நுனுங்கி கொட்டுவதை சரி செய்கிறது.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை