How to Stop Hair Loss and Regrow Hair Naturally in Tamil
தினமும் செயற்கை எண்ணெய், அதில் என்ன ரசாயன பொருட்கள் சேர்கிறார்கள் என்று தெரியாமல் அதனை வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்போம். எப்போதும் கருவேப்பிலை எண்ணெய் மட்டுமே வீட்டில் செய்து அதை தடவுவது தெரியும். ஆனால் வீட்டிலேயே தேங்காயை வைத்து எப்படி எண்ணெய் காய்ச்சுவது மற்றும், அதில் என்ன பொருட்கள் பயன்படுத்தவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Regrow Hair Naturally in 3 Weeks in Tamil:
முதலில் 2 கிலோ தேங்காய் எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதனை தண்ணீரில் போட்டு வைக்கவும். அடுத்து அதனை எளிதாக துருவ முடியாது. எனவே சிறிய துண்டாக நறுக்கி அதனை மிக்சி ஜாரில் போட்டு அதனை துகள் போல் அரைத்துக் கொள்ளவும். உங்களால் மிக்சியில் அரைக்க முடியும் என்றால் அதிலேயே அரைத்துக் கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வழுக்கையாக உள்ள இடத்திலேயும் புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க போதும்..!
உங்களால் துருவிக் கொள்ள முடியும் என்றால் துருவி கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தேங்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இரவு செய்ய போகிறீர்கள் என்றால் காலையில் தேங்காய் அரைக்க வேண்டும்.
அப்படியே அரைத்த தேங்காயை வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் மேல் பக்கம் தேங்காய் மட்டும் வந்து விடும். அதில் ஒரு டியூப் வைத்து உரிந்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தேங்காய் பாலில் இருக்கும் தண்ணீர் வெளியில் வந்து விடும்.
அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்க்கவும். அதை கிண்ட கிண்ட மேல் சிதறும். ஆகவே மூடி வைத்து அதனை அப்படியே கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அடி பிடிக்காமல் இருக்க வேண்டும்.
அடுத்து இதில் 3 நெல்லிக்காய் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்து கருவேப்பிலை 2 கொத்து, 7 செம்பருத்தி பூ, கீழாநெல்லி 1 கைப்பிடி மற்றும் அதனுடைய வேர் எடுத்துக் கொள்ளவும்.
இது அனைத்தையுமே நாம் கிண்டிக்கொண்டு இருக்கும் தேங்காயில் சேர்க்க வேண்டும். பின் அதனை சேர்த்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியே 1 மணி நேரத்திற்கு மேல் கிண்டிகொண்டு இருந்தால் அது எண்ணெய் போல் வரும்.
ஒரு மாதிரி நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு சூடு ஆறியதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தடவுவதால் அசுர வேகத்தில் முடி வளரும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் உங்கள் முடி அசுரவளர்ச்சி அடைய இந்த மூன்று டிப்ஸை மற்றும் பாலோ பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |