உதிர்ந்த முடி மீண்டும் வளர..!| Regrow Lost Hair Naturally Home Remedies in Tamil..!
பெண்கள் அனைவருக்கும் அவர்களின் முடி கொட்டாமல், நீளமாகவும் கருப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அவர்கள் பல விதமான முயற்சிகளையும் செய்திருப்பார்கள். அப்படி இருந்தாலும் முடி கொட்டும் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தலையில் பொடுகு, பேன், அழுக்கு போன்றவை இருப்பதாலும், உடம்பில் சத்துக்கள் குறைபாடு இருப்பதாலும் முடி கொட்டுகிறது. எனவே நம் ஊரில் எளிதில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி உதிர்ந்த முடியை எப்படி மீண்டும் வளர வைப்பது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
செம்பருத்தி Hair Pack செய்ய தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பூ – 10
- கற்றாழை – 1
- சின்ன வெங்காயம் – 4
- எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
செம்பருத்தி ஹேர் பேக் செய்யும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
அடுத்து செம்பருத்தி பூவின் காம்பை எடுத்து கொள்ளுங்கள். அதன் பின் சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ இரண்டையும் மிக்சி ஜாரில் உள்ள கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
இப்போது அரைத்து வைத்துள்ள பேஸ்டை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
போதும் போதும் என்று சொல்ற அளவுக்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!
தலை முடிக்கு அப்ளை செய்யும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் உங்கள் முடியை சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள். பிறகு வாகு எடுத்து இரண்டு பக்கமாக பிரித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
அதன் பின் ஒரு பக்கத்தில் இருந்து சிறிது சிறிது முடியாக பிரித்து அரைத்து வைத்த Hair Pack-கை எடுத்து முடியின் வேர்களில் படும்படி தேய்த்து கொள்ளுங்கள்.
ஒரு முறை இதை ட்ரை செய்தால் போதும் முடி உதிர்வு குறைந்து முடி வேகமாக வளரும்..!
ஸ்டேப்: 3
இதே போல் வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து இந்த ஹேர் பேக்கை போட்டு வந்தால் உதிர்ந்த முடிகள் மீண்டும் வளர தொடங்கி விடும்.
அதுமட்டுமில்லாமல் வாரத்திற்கு 3 நாட்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி முடிக்கு மசாஜ் செய்து வந்தால் முடியின் வேர்க்கால்கள் பலமாகி விரைவில் முடி வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |