கற்றாழையை இப்படி பயன்படுத்தினால் 3 நாட்களிலே கருவளையம் காணாமல் போய்விடும்..!

Advertisement

Best Under Eye Cream For Dark Circles At Home in Tamil

இக்காலத்தில் உள்ள பெரும்பாலானோர்க்கு கருவளையம் வருகிறது. ஏனென்றால்  அதிகப்படியான வேலைகள் சிஸ்டம் அல்லது போனில் பார்க்கிறோம். அதிக நேரம் போன் பார்ப்பதினால் அதிகமானோருக்கு கருவளையம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போனை பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இரவில் தூங்காமல் போன் பார்த்துகொண்டே இருப்பது தான் முக்கிய காரணம்.

ஆனால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குபவர்களுக்கும் கருவளையம் வரும். காரணம் என்னவென்றால் வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருப்பதே. எனவே கருவளத்தை சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி விரைவில் போக்குவது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Dark Circles Under Eyes Permanently in Tamil:

How To Remove Dark Circles Under Eyes Permanently in Tamil:

கருவளையத்தை போக்க தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
  2. பாதாம் பவுடர்- 1 ஸ்பூன்
  3. உருளைக்கிழங்கு சாறு- 3 ஸ்பூன் 

கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்க:

 கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்க

முதலில் உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்து நன்றாக கழுவி கொள்ளுங்கள். பிறகு, இதன் தோலை நீக்கிவிட்டு ஜூஸர் அல்லது வெஜிடபுள் ஸ்க்ரப்பரில் சீவி சாறை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

 how to remove dark circles at home naturally in 2 days in tamil

இப்போது ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் பாதாம் பவுடர் மற்றும் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

முகப்பருவை நிரந்தரமாக நீக்குவதற்கு கற்றாழையை இப்படி பயன்படுத்தவும்

அப்ளை செய்யும் முறை:

இரவில் தூங்குவதற்கு முன்பு, கண்களை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள். பிறகு தயார் செய்து வைத்துள்ள கற்றாழை க்ரீமை கருவளையம் உள்ள இடத்தில் தடவி கொள்ளுங்கள்.

இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு காலையில் தண்ணீர் விட்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் கருவளையம் மறைந்து விடும். இதை பயன்படுத்திய 3 நாட்களிலே உங்களுக்கு கருவளையம் மறைய தொடங்கும்.

உருளைக்கிழங்கு சாறுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..! செம கலரா ஆகிடுவீங்க..!

குறிப்பு:

சளி,சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை அப்ளை செய்து 15 நிமிடத்திற்கு பிறகு கழுவி விட வேண்டும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement