கரும்புள்ளி மறைய என்ன செய்வது..! How Remove Pimples On Face..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பெண்கள் அதிகமாக விரும்பி எதிர்பார்க்கும் ஒரு முக்கிய டிப்ஸை இன்று நாம் பார்க்கப்போகிறோம். அது என்ன முக்கிய டிப்ஸ்னு பாக்குறீங்களா..! பெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை நீக்க எளிமையான வீட்டு வைத்தியம் தாங்க. பெண்கள் அனைவருமே முகத்தின் அழகை அதிகரிக்க பியூட்டி பார்லர், கடைகளில் விற்கும் கிரீம்களை முகத்தில் தடவி முக அழகையே வீணடித்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் நிறைய ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அதனால் இயற்கையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளியை (Remove Dark Spots) எப்படி நீக்கலாம் என்பதை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது? |
முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய:
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 1 (தோல் சீவியது)
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
- உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்
Step 1:
முதலில் 1 உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கின் மேல் உள்ள தோள்களை சீவி எடுத்து கொள்ள வேண்டும்.
பின் தோல் சீவியதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
Step 2:
பிறகு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை உரலில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
அடுத்து தனியாக ஒரு பவுலில் கற்றாழை ஜெல் 1டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.
Step 3:
கற்றாழை ஜெல்லுடன் மசித்த உருளைக்கிழங்கு பேஸ்டை இதில் சேர்க்கவும். இப்பொது நன்றாக கலந்து கொள்ளவும்.
அவ்ளோதாங்க இந்த கரும்புள்ளியை நீக்க பேஸ்ட் ரெடி. இதை தினமும் முகத்திற்கு தடவி வரவேண்டும்.
முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக இதைTry பண்ணுங்க..! |
கரும்புள்ளி பரு தழும்புகள் மறைய – குறிப்பு 1:
இந்த உருளைக்கிழங்கு ஜெல்லானது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், சருமத்திலுள்ள கறைகளை நீக்கும் தன்மை உடையது.
உருளைக்கிழங்கு சாற்றில் அதிகமாக அமிலத்தன்மை கொண்டுள்ளது. இதனால் நமது உடல் தோல் வெண்மையாக இருக்கும்.
கரும்புள்ளி பரு தழும்புகள் மறைய – குறிப்பு 2:
கற்றாழை ஜெல் பொதுவாகவே முக சருமத்தை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். கற்றாழை ஜெல் உங்கள் தோல் மற்றும் சருமத்தை எப்போதும் மென்மையாகவும், மிருதுவான தன்மையாகவும் வைத்திருக்கும்.
முகத்தில் சிலருக்கு எப்போதும் எண்ணெய் பசை இருந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணெய்பசையை நீக்கும் தன்மை உருளைக்கிழங்கு ஜெல்லிற்கு உள்ளது.
அடுத்து இந்த ஜெல், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற நோய்களிலிருந்தும் உங்கள் சருமத்தை பாதுகாத்து வைத்திருக்கும்.
கரும்புள்ளி பரு தழும்புகள் மறைய – குறிப்பு 3:
இந்த ஜெல்லானது உடலில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி தோல் மற்றும் சருமத்தை பிரகாசமாக வைத்திருக்கும்.
சருமத்தில் ஏற்படும் வறட்சி தன்மை, முக சுருக்கம் இது போன்ற பிரச்சனைகளை நீக்கிவிடும்.
அடுத்து உங்கள் உடலில் கொலாஜென் வளர்ச்சியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தோல் இளமையாகவும் இருக்கும்.
முகத்தில் கரும்புள்ளி உள்ளவர்கள் இனி கவலை பட தேவையில்லை. இந்த டிப்ஸை பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்கி ஆரோக்கியமாக இருங்கள்.
நன்றி வணக்கம்..!
அட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |