பெண்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை எளிமையாக நீக்க இந்த முறையை பின்பற்றுங்கள்.!

Advertisement

Remove Facial Hair Naturally in Tamil

பொதுவாக முகத்தில் குறைவான அளவில் முடி வளர்வது என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால் இது ஒரு சிலருக்கு அதிகமாக வளர்ந்து முகத்தின் அழகை குறைத்து விடுகிறது. இதனால் பெண்கள் பலவிதான செயற்கை க்ரீம்களையும் அல்லது பார்லருக்கு சென்றும் முகத்தில் உள்ள தேவையற்ற முடியினை நீக்கி விடுகிறார்கள். ஆனால், ஒரு ருபாய் கூட செலவில்லாமல் முகத்தில் உள்ள முடிகளை சில இயற்கையான பொருட்களை கொண்டு நீக்கி விடலாம். அதனை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies For Unwanted Facial Hair in Tamil:

 remove facial hair naturally in tamil

முட்டை மற்றும் சோளமாவு:

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கரு 2 தேக்கரண்டி, சோளமாவு 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பேக்கை முதலில் அப்ளை செய்து நன்றாக காய விடவும். காய்ந்ததும் ஒரு முனையை மட்டும் உரித்தால் அப்ளை செய்த பேஸ்டுடன் முடியும் சேர்ந்து வந்துவிடும்.

நன்மைகள்:

முட்டையின் வெள்ளைக்கரு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், முகத்தில் உள்ள முடிகளை நீக்கவும் பயன்படுகிறது.

பப்பாளி மற்றும் மஞ்சள்:

பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கி பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளவும். அதனுடன் மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தேவையில்லாத முடிகளில் மீது அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் போதும்.

நன்மைகள்:

பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் உள்ளது. இதனால் தேவையில்லாத முடிகளை நீக்க உதவுகிறது. மஞ்சள் முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

இனி நரைமுடியை மறைப்பதற்கு காசு கொடுத்து டை வாங்க தேவையில்லை..

சர்க்கரை மற்றும் தேன்:

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தேவையில்லாமல் முடி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து ஈர துணியை பயன்படுத்தி தேய்க்கவும்.

நன்மைகள்:

சர்க்கரை சருமத்தின் இறந்த செல்களை நீக்கி முக முடிகளை நீக்குவதற்கு உதவுகிறது. தேன் சருமத்தை பொலிவாக மற்ற உதவுகிறது.

கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்:

ஒரு பவுலில் 2 தேக்கரண்டு கடலைமாவு, 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து நன்றாக காய விடவும்.

காய்ந்ததும் ஈர துணியை பயன்படுத்தி தேய்த்தால் முடியெல்லாம் நீங்கிவிடும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அப்ளை செய்யலாம்.

நன்மைகள்:

கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் முடியின் வளர்ச்சியை தடுக்கவும், முடிகளை நீக்கவும் உதவுகிறது.

மேல் கூறப்பட்டுள்ள பேக் முகத்தில் உள்ள முடிக்கும் மட்டுமில்லை உடம்பில் தேவையில்லாத முடிகள் எங்கு இருந்தாலும் ஏதவாது ஒரு பேக்கை அப்ளை செய்தாலே முடிகள் நீங்கிவிடும்.

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement