பெண்களே இந்த பொங்கலுக்கு புடவை கட்ட இந்த ஐடியா Ok வான்னு பாருங்க

Advertisement

Pongal Saree Ideas

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் அன்று புத்தாடை அணிந்து பொங்கல் வைப்பார்கள். பொதுவாக எந்த பண்டிகையாக இருந்தாலும் பெண்கள் புடவை கட்டுவார்கள். புடவை கட்டுவது நமது பாரம்பரியத்தில் ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு தான் புடவை இருந்தாலும் என்ன புடவை கட்டுவது என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும். இந்த பிரச்சனை எல்லா பெண்களும் நினைப்பதாக இருக்கிறது. இந்த நாளன்று என்ன புடைவை கட்டுவது என்று தவித்து கொண்டிருப்பீர்கள். அதனால் நம்முடைய பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் சில ஐடியாக்களை பதிவிட்டுள்ளோம். அதனை தெரிந்து கொள்வோம் வாங்க..

என்ன கலர்:

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். ஆகையால் இது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆக இந்த நாளில் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை போன்ற நிறங்களில் புடைவை கட்டலாம். இந்த நிறங்கள் மகிழ்ச்சியையும், வளத்தையும் குறிக்கிறது.

பட்டு புடவை:

pongal saree ideas

பட்டு புடவை பொங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனால் இந்த நாளில் காஞ்சிபுரம் பட்டு, பனாரசி பட்டு, மைசூர் பட்டு போன்றவை சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் இதில் கோல்டன் நிற ஜரிகை வருவது போல கட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

புடவையில் நீங்கள் உயரமாக தெரிய வேண்டுமா.? அப்போ இதை மட்டும் பண்ணுங்க..!

காட்டன் புடவை:

எல்லாராலும் பட்டு புடவை கட்ட முடியாது. அவர்கள் அனைவரும் காட்டன் புடைவையை தேர்வு செய்யலாம். கோட்டா காட்டன், மங்களகிரி காட்டன் போன்ற காட்டன் புடவைகளை தேர்வு செய்யலாம். இந்த புடவைகளில் சின்னதாக பூ போட்டிருக்க வேண்டும். இந்த புடவைகள் அன்றைய நாள் முழுவதும் கட்டி கொண்டு வேலை செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

சந்தன நிறம், நில நிறம், கருநீல நிறம் போன்ற நிறங்களில் காட்டன் புடவைகள் அணிவது இந்த பண்டிகைக்கு சிறப்பான தோற்றத்தை தரும். இந்த நிறங்கள் அனைத்து வகையான பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

 ஜரிகை புடவை:

எனக்கு பட்டு புடவை, காட்டன் புடவை எல்லாம் கட்ட மாட்டேன் என்பவர்கள் பாரம்பரிய ஜரிகை வேலைப்பாடுகள், பூ வேலைப்பாடுகள், மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் பொங்கல் பண்டிகைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அதில் மயில், தாமரை, மற்றும் மாங்காய் போன்ற வடிவமைப்புகள் புடவைகளில் இருந்தால் பார்ப்பவர்களின் கண்ணை கவரும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement