Secret Hair Growth Oil in Tamil
எவ்வளவு காசு கொடுத்து எண்ணெய் வாங்கி அதனை அப்ளை செய்தாலும் அது நல்ல ரிசல்ட் கொடுக்கவில்லை. தலை முடி பிரச்சனை அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் உள்ளது. அதாவது தலை முடி உதிர்வு, பொடுகு, நரை முடி, மெலிந்த முடி என தலை முடிக்கு மட்டும் வித விதமான பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருகிறது. இதற்கு என்ன தான் தீர்வு இதனை சரி செய்ய முடியதா என்றால் கண்டிப்பாக முடியும். ஏனென்றால் தலை முடி உங்களுக்கு முன்பு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது தான் தலை முடி உதிர்கிறது என்றால், அதனை நிறுத்தி தலை முடியை நீளமாக வளர வைக்கும் எண்ணெய் இது தான். அது எப்படி என்றும் அதனை எப்படி தயாரிப்பது என்றும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Secret Hair Growth Oil in Tamil:
தலை முடி உதிர்வு, பொடுகு, நரை முடி என அனைத்திற்கும் இந்த இயற்கை எண்ணெய் போதுமானது. ஆகவே அதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். அதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம் வாங்க..!
தேவையான பொருட்கள்:
♦ கருவேப்பிலை – 1 கப்
♦ மருதாணி இலை – 1 கப்
♦ வேப்பிலை – 1 கப்
♦ செம்பருத்தி இலை – 1 கப்
♦ செம்பருத்தி பூ – 1 கப்
♦ கரிசலாங்கன்னி இலை – 1 கப்
♦ சின்ன வெங்காயம் – 1/2 கப்
♦ பெரிய நெல்லைக்காய் – 6
♦ கருஞ்சீரகம் – 20 கிராம்
♦ வெந்தயம் – 20 கிராம்
♦ தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
செய்முறை:
முதலில் ஒரு உரலில் அல்லது மிக்சி ஜாரில் நெல்லிக்காய் தனியாக, வெங்காயம் தனியாக இடித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து காடாய் அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் எடுத்து வைத்துள்ள இலைகளை போடவும்.
அதாவது, கருவேப்பிலை – 1 கப், மருதாணி இலை – 1 கப், வேப்பிலை – 1 கப், செம்பருத்தி இலை – 1 கப், செம்பருத்தி பூ – 1 கப், கரிசலாங்கன்னி இலை – 1 கப் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இதையும் படியுங்கள்⇒ பாலுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்.. முகம் செம பிரைட்டா இருக்கும்..
அதன் பின்பு அதில் இடித்து வைத்துள்ள நெல்லிக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதன் பின்பு கடைசியில் வெந்தயம், கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் அவ்வளவு தான் தேங்காய் எண்ணெய் ரெடி. இதனை தினமும் தேங்காய் எண்ணெய் போல் அப்ளை செய்து கொள்ளலாம்.
கையில் பிடிக்க முடியாத அளவிற்கு முடி கட்டுக்கடங்காமல் கருப்பாக வளர செம்பருத்தி ஒன்று போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |