Sembaruthi Conditioner Pack For Skin Whitening In Tamil
பெண்கள் முகம் பொலிவடைய வீட்டிலேயே சில இயற்கையான Face Pack செய்து முகத்துக்கு பயன்படுத்துகிறார்கள். கற்றாழை, தோசை மாவு, தக்காளி, செம்பருத்தி போன்ற பொருட்களை வைத்து எந்த கெமிக்கல் பொருட்களும் இல்லாமல் இயற்கையான Face Pack செய்து உபயோகிக்கிறார்கள். எந்த கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாக Face Pack செய்து பயன்படுத்துவது தான் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய பதிவில் வீட்டளையே இயற்கையாக செம்பருத்தி பூவை மட்டும் வைத்து எப்படி Face Pack செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சூப்பர் தீர்வு -செம்பருத்தி எண்ணெய்..!
செம்பருத்தி பூ:
செம்பருத்தி பூக்களில் நிறைய வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றது. செம்பருத்தி பூவை சாப்பிடுவதாலும் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. மேலும் செம்பருத்தி பூவை பாதம் பிசின் உடன் சேர்த்து அரைத்து முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
செம்பருத்தி Face Pack தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பூ – 5
- பாதம் பிசின் – 1 ஸ்பூன் அளவு
செம்பருத்தி Face Pack செய்முறை:
- முதலில் செம்பருத்தி பூவில் காம்பு மற்றும் மகரங்கத்தை அகற்றி, ஒரு கப்பில் தண்ணீர் ஊற்றி பூக்களை ஊற வைக்க வேண்டும்.
- அதனுடன் பாதம் பிசின் -ஐ சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த செம்பருத்தி பூ மற்றும் பதம் பிசின் -ஐ சேர்த்து நன்கு விழுதாக அரைக்க வேண்டும்.
- இதனை அரைத்து எடுத்தால் செம்பருத்தி Face Pack தயாராகிவிடும்.
செம்பருத்தி Face Pack எப்படி பயன்படுத்தவேண்டும்:
- தயார் செய்த செம்பருத்தி Face Pack -ஐ சருமத்திற்கு மற்றும் கூந்தலுக்கு பயனப்டுத்தலாம்.
- முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்கு கழுவி விட்டு, அதன் பின் செம்பருத்தி Face Pack Apply செய்ய வேண்டும். அதன் பின் ஒரு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
- கூந்தலுக்கு வழக்கமாக கண்டிஷனர் Apply செய்வது போல் இதையும் Apply செய்து பயன்படுத்தலாம்.
- இதனை வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் சருமத்திலும் கூந்தலிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.
செம்பருத்தி Face Pack பயன்படுத்துவதால் ஏற்படும் நற்பலன்கள்:
சரும வறட்சி நீங்கும்:
சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்ட இந்த செம்பருத்தி மற்றும் பாதம் பிசின் கலவை, சரும வறட்சி நீங்கி சருமம் மிருதுவாக இருக்க உதவுகிறது.
சுருக்கங்கள் மறையும்:
சரும கொலாஜன் அளவை அதிகரிக்கும் பண்பு கொண்ட இந்த கலவை, சருமத்தில் காணப்படும் மென் கோடுகள் மற்றும் சுருக்கத்தை மறைத்து இளமை தோற்றத்தை நீடிக்க உதவுகிறது.
கூந்தல் வறட்சியை போக்கும்:
செம்பருத்தி பாதம் பிசின் கலவையில் உண்டான இந்த சேர்மத்தை கூந்தலுக்கு கண்டிஷனர் போல் பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி பிரச்சனை நீங்கி கூந்தல் மிருதுவாக இருக்கும்.
Semparuthi Poo Benefits in Tamil
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |