அழகுக்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி பூ… இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Sembaruthi Poo Beauty Tips in Tamil..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் ஒரு சூப்பரான டிப்ஸ் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். செம்பருத்தி பூ பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அனைவரின் வீட்டு பகுதிகளிலும் செம்பருத்தி செடி கட்டாயமாக இருக்கும். அனைத்து பெண்களுக்குமே முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதுபோல உங்கள் அழகை மேம்படுத்த செம்பருத்தி பூவை பயன்படுத்துங்கள். செம்பருத்தி பூ சரும பிரச்சனைகளை சரி செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் செம்பருத்தி பூவை வைத்து உங்கள் அழகை எப்படி மேம்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதையும் பாருங்கள் ⇒ கோதுமை மாவில் மறைந்துள்ள ரகசிய அழகு குறிப்புகள் 

செம்பருத்தி பூவின் அழகு குறிப்புகள்:

செம்பருத்தி பூ குளிர்காலங்களில் நமது சருமத்தை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. இது சருமத்தில் ஏற்படும் தோல் வறட்சி பிரச்சனைகளை சரி செய்கிறது. செம்பருத்தி முடி பராமரிப்பிற்கு உதவும் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் முகத்தை அழகாக வைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். இதோ உங்களுக்காக சில டிப்ஸ்…

செய்முறை -1 

ஒரு கிண்ணத்தில் செம்பருத்தி பூ பொடி மற்றும்  தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதுபோல செய்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

துளசி இலையில் ஒளிந்திருக்கும் அற்புதமான அழகு குறிப்புகள்

செய்முறை -2

ஒரு கிண்ணத்தில் செம்பருத்தி பொடி 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் அரை ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும்.

பின் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது போல வாரம் 2 முறை செய்து வருவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும் முகம் பொலிவாக இருக்கும்.

செய்முறை -3

5 செம்பருத்தி பூவை கழுவி விட்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் முல்தானி மெட்டி பவுடர் சேர்த்து கொள்ள வேண்டும். பின் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும்.

பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வருவதால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement