Shikakai vs Shampoo Which is Better in Tamil
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி தலை குளிக்கும் போது ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலை குளிப்போம். பல விதமான ஷாம்பூ மற்றும் சீயக்காய் பயன்படுத்துவோம். இப்படி பயன்படுத்தும் போது தலைமுடிக்கு எது நல்லது எது கெட்டது என்று அறிந்து பயன்படுத்துகிறீர்களா.! இல்லையே அதெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். கிடைக்கின்ற ஷாம்பை பயன்படுத்துவேன் என்று பயன்படுத்தாதீர்கள். இந்த பதிவில் ஷாம்பூ VS சீயக்காய் எது நல்லது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
சீயக்காய் தீமைகள்:
நம் முன்னோர்கள் காலத்தில் சீயக்காய் தான் பயன்படுத்துவார்கள். சீயக்காய் பயன்படுத்துவதால் உடலின் வெப்ப நிலையை குறைக்க உதவுகிறது.
கடையில் விற்கும் சீயக்காய் முடிக்கு ஆரோக்கியமானது இல்லை. காரணம், சீயக்காய் கொட்டாங்குச்சியை அரைத்து சேர்க்கிறார்கள். இது மட்டுமே 60- 70% இருக்கிறது. மேலும் 2 அல்லது 3 கெமிக்கல் சேர்த்து தான் சீயக்காய் தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் போது முடிக்கு ஏற்றது இல்லை. ஏனென்றால், சீயக்காய் தேய்த்து குளித்து சரியாக வாஸ் பண்ணவில்லை என்றால், அதாவது சீயக்காய் முடியின் வேர்களில் ஒட்டி இருந்தால் தலையில் அரிப்பு, பொடுகு பிரச்சனை வந்துவிடும்.சீயக்காய் நல்லது ஆனால் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த சீயக்காய் பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் வீட்டிலே தயாரிக்கும் சீயக்காயை பயன்படுத்தலாம். அதுவும் தினமும் சீயக்காய் போட்டு தலை தேய்க்க கூடாது. முக்கியமாக தலையில் எண்ணெய் வைக்காமல் சீயக்காய் பயன்படுத்த கூடாது.
இதையும் படியுங்கள் ⇒ சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள்
ஷாம்பூ பயன்படுத்துபவர்கள்:
ஷாம்பூவில் வழவழப்பு தன்மை இருப்பதால் முடியை பளபளப்பாக வைத்திருக்க முடியும். ஷாம்பூவை பயன்படுத்தி தலை குளித்த பிறகு நீண்ட நாட்களுக்கு தலையை பிரஷாக வைத்திருக்க உதுவுகிறது.
நீங்கள் எந்த ஷாம்பூ பயன்படுத்தினாலும் அதில் கலந்திருக்கும் இரசாயனங்கள் என்னென்ன என்று பார்த்து வாங்க வேண்டும். Paraben and Sulphate போன்ற கடின இரசாயனங்கள் இருக்க கூடாது. இந்த மாதிரி கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்தும் போது நாளடைவில் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.ஷாம்பூ குறைந்த விலையாக இருக்கு என்று பார்த்து வாங்காமல் அதில் கலந்திருக்கும் கெமிக்கலை பார்த்து வாங்க வேண்டும். முக்கியமாக ஷாம்பூ பயன்படுத்தும் போது நேரடியாக அப்ளை செய்ய கூடாது. ஷாம்பூவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து தான் அப்ளை செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |