அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்புகள்..!

அழகு குறிப்புகள்

அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்பு (Simple Beauty Tips For Face)..!

ஹாய் பிரன்ட்ஸ் இன்னைக்கு நாம அழகு குறிப்பு பகுதியில் சரும நிறத்தை அதிகரிக்க இரவில் செய்ய கூடிய எளிய அழகு குறிப்புகள் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். அழகு என்பது அவரவர் குணம் சார்ந்தது என்று சொல்வது உண்மை தான். இருப்பினும் அதை யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.

சரும நிறத்தை முழுமையாக மாற்ற அறுவை சிகிச்சையால் மட்டுமே முடியும். இருப்பினும் அவையெல்லாம் எதிர்காலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய அழகு குறிப்புகள் சிலவற்றை நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்பு (Simple Beauty Tips For Face)..!

சருமம் அழகாக அழகு குறிப்புகள் – ரோஸ் வாட்டர்:

ரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது. எனவே இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

பின்பு பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது. இதனால் என்றும் சருமம் அழகாக காணப்படும்.

சருமம் சிவப்பாக அழகு குறிப்புகள் – எலுமிச்சை சாறு:

இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் இரவில் செய்து வர, சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் அகலும். அதேபோல் என்றும் சருமம் சிவப்பாக இருக்கும்.

சருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் !!!

சருமம் அழகாக அழகு குறிப்புகள் – வெள்ளரிச்சாறு:

வெள்ளரிக்காய் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டது, எனவே இரவு தூங்குவதற்கு முன், வெள்ளரிச்சாறில் சிறிதளவு காய்ச்சாத பால் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வர, என்றும் சருமம் சிவப்பாக காணப்படும்.

சருமம் பளபளப்பாக அழகு குறிப்புகள் – உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கில் உள்ள பிளிச்சிங் தன்மை சருமத்தில் உள்ள கருமையை அகற்ற பெரிதும் உதவுகின்றது.

எனவே இரவு தூங்குவதற்கு முன் உருளைக்கிழங்கில் சாறு எடுத்து அவற்றை சருமத்தில் அப்ளை செய்து, பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர என்றும் சருமம் பளபளப்பாக காணப்படும்.

சருமம் மென்மையாக அழகு குறிப்புகள் – பட்டை பொடி:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும்.

பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும்.

முகம் பளபளப்பாக அழகு குறிப்பு – தயிர்:

தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும், பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர என்றும் சருமம் பொலிவுடன் காணப்படும்.

 முகம் பளபளப்பாக அழகு குறிப்பு – தேங்காய் நீர்:

தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர என்றும் முகம் பளபளப்பாக இருக்கும்.

கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்..!