ஆண்கள் முகம் பொலிவு பெற 5 அழகு குறிப்புகள்..! Skin Care Tips for Men in Tamil..!
பெண்கள் மட்டும் தான் சரும அழகை பாதுகாக்க வேண்டுமா.. ஆண்கள் சரும அழகை பற்றி அக்கறை செலுத்த கூடாதா.. இது என்ன நியாயம் அவர்களுக்கு மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசையே இருக்காதா என்ன.. சரும பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று யார் கூறினார்கள்? ஆண்களுமே சரும பராமரிப்பை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஆக ஆண்களுக்கான பதிவு தான் இன்றைய பதிவு. அதாவது ஆண்கள் முகம் பொலிவு பெறுவதற்க்கான 5 அழகு குறிப்புகளை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க ஆண்களுக்கான அழகு குறிப்பு என்னென்ன உள்ளது என்று இப்பொழுது பார்த்துவிடுவோம்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
க்ளென்சர் பயன்படுத்துங்கள்:
Skin Care Tips for Men in Tamil – கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே காலையில் மென்மையான க்ளென்சர் மற்றும் மாலையில் ஜெல் வடிவிலான கிளென்சரை பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் முகத்தில் உங்கள மாசுக்கள் அனைத்தும் அகன்று சருமம் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் காணப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண்கள் இப்படி தான் தலை குளிக்கிறீர்களா.! அப்போ விரைவில் வெள்ளை முடி வந்துவிடும்
ஆண்கள் முகம் புத்துணர்ச்சி பெற – ஸ்க்ரப்பர்:
தேவையான பொருட்கள்:
- காபி தூள் – ஒரு ஸ்பூன்
- சர்க்கரை – ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
Skin Care Tips for Men in Tamil – ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும் அதில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக 5 முதல் 10 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகன்று முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
முகத்தில் உள்ள கருமை நீங்க:
தேவையான பொருட்கள்:
- வைட்டமின் E மாத்திரை – ஒன்று
- தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
Skin Care Tips for Men in Tamil – ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் வைட்டமின் E மாத்திரையில் உள்ள ஆயிலை பிழிந்து ஊற்றவும், பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் எங்கெல்லாம் கருமையாக உள்ளதோ அங்கெல்லாம் அப்ளை செய்யவும். பின் இரவு அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமைகள் மறைய ஆரமிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண்கள் முகம் சிவப்பாக இயற்கை அழகு குறிப்புகள்..!
மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்:
Skin Care Tips for Men in Tamil – பொதுவாக ஆண்கள் வீட்டில் இருப்பதில் பெரும்பாலும் வெளியே சென்றுவர வேண்டிய வேலை இருக்கும். ஆக இதன் காரணமாக சருமம் வறண்டு போய்விடும். எனவே உங்கள் சருமத்திற்கு ஏற்றது போல் மாய்ஸ்சரைசரை அப்ளை செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் வெயிலினால் ஏற்படும் சரும வறட்சி நீங்கி சருமம் சாப்டாக இருக்கும்.
சன் ஸ்கிரீன்கள் பயன்படுத்துங்கள்:
Skin Care Tips for Men in Tamil – பொதுவாக அனைவரையுமே சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தோல்மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். சன் ஸ்கீரின்கள் இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது. புற ஊதா கதிர்வீச்சிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியம். ஆக உங்கள் சருமத்திற்கு ஏற்றது போல் சன் ஸ்கிரீன்களை பயன்படுத்துங்கள்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |