முகம் பொலிவு பெற இயற்கை அழகு குறிப்புகள் | Glowing Skin Home Remedies in Tamil

Advertisement

முகம் பொலிவு பெற வழிகள் | Skin Glowing Tips in Tamil

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்குமே சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்து கொள்வதற்கு மிகவும் பிடிக்கும். முகத்தை பொலிவாக வைத்து கொள்வதற்காக நம்மில் பலரும் பலவிதமான கிரீம்களை பயன்படுத்துவோம். ரசாயனம் கலந்த கீரீம்களை பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகள் வரலாம். நாம் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இயற்கையாக முகத்தை எப்படி? பொலிவாக வைத்துக்கொள்ளலாம் என்பதற்கான சில டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள் – Glowing Skin Home Remedies in Tamil:

Glowing Skin Home Remedies in Tamil

  1. கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  2. பால் பவுடர் அல்லது காய்ச்சாத பால் – 1 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  4. தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை: 1 – Glowing Skin Tips in Tamil:

ஸ்டேப்: 1

  • Face Brightness Natural Tips: ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் (பால் பவுடர் இல்லையெனில் காய்ச்சாத பால் சேர்த்து கொள்ளலாம் ) சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • Skin Glowing Tips in Tamil: பின் அதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இப்போது முகத்தை கழுவி விட்டு பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்யவும்.
  • இரண்டு நிமிடம் கழித்து முகத்தை சாதாரண நீரினால் கழுவி விடவும். இதே போன்று தினசரி செய்து வந்தால் பொலிவான சருமத்தை பெறலாம்.

தேவையான பொருட்கள் – முகம் பொலிவு பெற வழிகள் (Glowing Skin Tips in Tamil)

Daily Face Care Tips in Tamil

  1. ஓட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  2. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
  3. தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 2 – Skin Glowing Tips in Tamil:

ஸ்டேப்: 1

  • Face Shine Tips in Tamil: ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

  • பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி 1-2 நிமிடம் ஸ்கரப் செய்து விட்டு, முகத்தை நீரினால் கழுவவும். இந்த பேஸ்டை வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி அழகான சருமத்தை பெறலாம்.

தேவையான பொருட்கள் – Glowing Skin Home Remedies in Tamil:

முகம் பொலிவு பெற வழிகள்

  1. உருளைக்கிழங்கு பவுடர் அல்லது உருளை கிழங்கு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  2. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  3. தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 3 – Tips For Glowing Skin in Tamil:

ஸ்டேப்: 1

  • How to Get Face Glow in 10 Days: ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு பவுடர் அல்லது உருளை கிழங்கு ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு (எலுமிச்சை சாருக்கு பதிலாக அரிசி மாவு பயன்படுத்திக்கொள்ளலாம்), தேன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • இப்பொழுது இந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
  • இந்த பேஸ்டை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பொலிவாகவும், அழகாகவும் மாறிவிடும்.
1 முறை ட்ரை பண்ணுங்க..! முகம் தங்கம் போல் மின்னும்..!
மூக்கில் கருமை மறைய | Nose Black Mark Remove in Tamil

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement