முகம் பளிச்சென்று இருக்க
நாம் எப்போதும் வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் சென்றாலும் சரி முகம் என்றும் பளிச்சென்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். சிலர் வெளியில் செல்வதற்கு முன்பு முகத்திற்கு Facial போன்றவற்றை செய்து கொண்டு அதன் பிறகு செல்வார்கள். மற்ற சிலர் பார்லருக்கு சென்று முகத்தை வெள்ளையாக மாற்றி விட்டு வருவார்கள். இனிமேல் நீங்கள் இது மாதிரி எதையும் செய்யாமல் வீட்டில் இருக்கும் வெறும் ரோஜா இதழை வைத்து உங்களுடைய முகத்தை பளிச்சென்று வெள்ளையாக நீங்கள் மாற்றலாம். மேலும் முகத்தை பளிச்சென்று வெள்ளையாக மாற்றுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாங்க..!
முகம் வெள்ளையாக என்ன செய்வது:
உங்களுடைய முகத்தை பளிச்சென்று வெள்ளையாக வைப்பதற்கு முதலில் ரோஸ் Ice Cube தயார் செய்ய வேண்டும். அதனை எப்படி தயார் செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
- ரோஜா- 3
- கற்றாழை ஜெல்- 1 தேக்கரண்டி
- தண்ணீர்- 1 கப்
இதையும் படியுங்கள்⇒ வெறும் 3 பொருட்களை வைத்து வெள்ளை முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர செய்யலாம்..!
Skin Whitening and Brightening Home Remedies:
முகத்திற்கு ரோஜா:
ரோஜா இதழைகளை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தும் போது நம்முடைய முகம் இயற்கையாகவே பளிச்சென்று வெள்ளையாக மாறி முகத்தை அழகாக மாற்றி விடும்.
அதனால் முதலில் 3 ரோஜா பூக்களை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் இதழினை ஒவ்வொன்றாக பிரித்து சுத்தமான தண்ணீரில் அலசி தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.
ரோஜா இதழை தண்ணீருடன் சேர்த்தல்:
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் ரோஜா இதழ்களையும் சேர்த்து 3 முதல் 4 நிமிடம் வரை கொதிக்க வைய்யுங்கள்.
கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்தல்:
4 நிமிடம் கழித்த அடுப்பை அணைத்து விட்டு பின்பு அடுப்பில் இருக்கும் ரோஜா இதழ் தண்ணீரை இறக்கி வைத்து ஒரு மூடி போட்டு அதனை மூடி 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
இப்போது கற்றாழை ஜெல் சேர்த்தல்:
10 நிமிடம் கழித்த பிறகு ரோஜா இதழ் தண்ணீருடன் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
Ice Tray-வில் தண்ணீர் சேர்த்தல்:
அடுத்ததாக உங்கள் வீட்டு பிரிட்ஜில் இருக்கும் Ice Tray-வில் கலந்து வைத்துள்ள ரோஜா இதழ் தண்ணீரை சேர்த்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து விடுங்கள்.
2 மணி நேரம் கழித்து Ice Tray-வை வெளியே எடுத்து அதில் இருக்கும் Ice Cube- னை தனி தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முகத்திற்கு Ice Cube தயாராகிவிட்டது.
அப்ளை செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ரோஜா இதழ் Ice Cube- னை ஒரு நாளைக்கு ஒன்று என நீங்கள் முகத்தில் நன்றாக அப்ளை செய்து அதனை மசாஜ் செய்து விட்டு 10 நிமிடம் கழித்த பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
இதனை மட்டும் நீங்கள் செய்தால் போதும் எந்த விதமான கிரீமும் போடாமல் இயற்கையாக உங்களுடைய முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும். (குறிப்பு:சைன்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதனை முகத்திற்கு உபயோகப்படுத்த வேண்டாம்.)
இதையும் படியுங்கள்⇒ முடி நீளமாகவும். பொசு பொசுனு வளர இந்த 3 பொருள் மட்டும் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |