Skin Whitening Home Remedies in Tamil
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகம் பொலிவிழந்து காணப்படுவது என்பது தான் ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஆகும். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்பு, இன்றைய சூழலில் உள்ள சுற்று சூழல் மாசுபாடு மற்றும் உணவு முறை ஆகியவை தான். அப்படி உங்களின் முகமும் பொலிவிழந்து காணப்படுகின்றது என்று கவலைப்படும் நபரா நீங்கள் அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு நிலவு போல் பொலிவு பெற உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Permanent Skin Whitening Home Remedies in Tamil:
பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு நிலவு போல் பொலிவு பெற உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- சோம்பு – 3 டேபிள் ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 4 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன்
- ஓட்ஸ் மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 டம்ளர்
அடுப்பில் கடாயை வையுங்கள்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடனே 3 டேபிள் ஸ்பூன் சோம்பினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி நன்கு குளிரவிடுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரே நாள் இரவில் முகம் பொலிவு பெற வேண்டுமா..? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்
மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும்:
அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் கொதிக்க வைத்து குளிரவைத்துள்ள சோம்பினை தண்ணீருடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
வடிகட்டி கொள்ளவும்:
பின்னர் அதனை ஒரு சிறிய கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்
ஓட்ஸ் மாவினை சேர்க்கவும்:
இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவினை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து நன்கு வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நிலவு போல நன்கு பொலிவுடன் இருப்பதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |