ஒரே நாளில் முகம் வெள்ளையாக | Face Whitening Tips For Girl in Tamil
வெள்ளையாக இருந்தால் தான் அனைவரையும் மதிப்பாங்க என்று கருப்பாக இருப்பவர்கள் நினைக்கின்றன. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை கருமையாக இருந்தாலும் சரி வெண்மையாக இருந்தாலும் சரி அது வெறும் நிறம் தான்.
ஆனாலும் சிலருக்கு வெள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்காக நிறைய செயற்கை கிரீம்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறார்கள் இதனால் அவர்களின் முகம் அப்போது வேண்டுமானால் பளிச்சென்று இருக்கும். அதன் பின் அதனுடைய பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகவே நாம் என்ன செய்தாலும் அது இயற்கை முறையில் இருப்பது தான் சிறந்தது.
Quick Face Whitening Tips in Tamil:
- உருளைக்கிழங்கு – 1
- மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- பசும் பால் – சிறிதளவு
ஸ்டேப்: 1
முதலில் உருளைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தமாக கழுவிக்கொள்ளவும். அதன் பின் அதனை துருவி எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
துருவிய உருளைக்கிழங்கை எடுத்து உங்களின் கைகளில் வைத்து பிழியவும். இப்படி செய்வதால் அதிலிருந்து ஜூஸ் வெளியே வரும் அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
பிறகு உருளைக்கிழங்கை பிழிந்த பின் அதனுடைய சக்கையை எடுத்து கண்களுக்கு அடியில் இருக்கும் கருவளையத்தில் அப்ளை செய்து வரலாம் அது உங்களுக்கு வெண்மை நிறத்தை கொடுக்கும்.
ஸ்டேப்: 4
இப்போது நாம் கிண்ணத்தில் எடுத்து வைத்த உருளைக்கிழங்கு ஜூஸில் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதையும் படியுங்கள் ⇒ முகம் வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புகள்..!
ஸ்டேப்:5
அது கெட்டியாக இருந்தாலும் கொஞ்சம் பசும் பால் காய்ச்சாமல் சேர்த்து கொள்ளலாம். இப்போது மாஸ்க் ரெடி ஆகிவிட்டது.
இதனை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பயன்படுத்தினால் மட்டும் போதுமானது ஆகும். முதலில் முகத்தை கழுவிக்கொள்ளவும். அதன் பின் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முகத்தில் அந்த மாஸ்க் போட்டுக்கொள்ளலாம். இது முகம் எளிமையான விஷயம் ஆகும். அதனை போட்டு 10 நிமிடம் அப்படியே காயவிட்டு அதன் பின் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 முகம் மட்டுமில்லை உடல் முழுவதும் வெள்ளையாக மாற இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |