வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த வெயில் காலத்திலும் உங்க முகம் பொலிவுடன் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Updated On: April 5, 2023 5:09 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Skin Whitening Natural Home Remedies in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முகபருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். ஆனால் நாம் அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

அதனால் இன்று இல்லையென்றாலும் நாளடைவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபோல பெண்கள் செய்யும் தவறு என்னவென்றால் முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்பதற்காக கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படி செய்வதற்கு பதிலாக நம் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை வெள்ளையாக மாற்றலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

 skin whitening natural home remedies

  1. காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
  2. தேன் – 1 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு பால், 1 ஸ்பூன் அளவிற்கு தேன் மற்றும் 1 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

மேல்கூறிய பொருட்களை உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ளலாம்.

உதிர்ந்த முடி அனைத்தும் வேரிலிருந்து நீளமாக வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

அப்ளை செய்யும் முறை:

அப்ளை செய்யும் முறை

பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் குறைந்தது 20 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம்.

 இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 3 முறையோ செய்து வந்தால் உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும். நாம் சேர்த்த 3 பொருட்களும் சருமத்தில் எண்ணெய் பசையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்து கொள்கிறது. மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் முக கருமை போன்றவற்றை அடியோடு நீக்கி விடுகிறது.  

அதனால் இதை நீங்கள் ட்ரை செய்தால் வெயில் காலத்திலும் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now