இந்த வெயில் காலத்திலும் உங்க முகம் பொலிவுடன் இருக்க கேரட்டை இப்படி பயன்படுத்துங்க..!

Advertisement

முகம் பொலிவுடன் இருக்க | Skin Whitening Natural Remedies At Home

நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே முடி உதிர்வு போன்ற தலைமுடி பிரச்சனைகள் மற்றும் முகப்பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் வருவது இயற்கை தான். அதை நாமும் இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். ஆனால் நாம் அப்படி செய்வதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுகிறோம். இதனால் நாளடைவில் மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிலும் பெண்கள் செய்யும் முக்கியமான தவறு என்னவென்றால், முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் வெயில் காலத்திலும் உங்க முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

Skin Whitening Natural Remedies At Home in Tamil:

  1. கேரட் – 2
  2. காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
  3. தேன் – 1 ஸ்பூன்

கேரட் எடுத்து கொள்ளவும்:

கேரட் எடுத்து கொள்ளவும்

முதலில் 2 அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு கேரட்டை எடுத்து கழுவி கொள்ள வேண்டும். பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் நறுக்கி வைத்துள்ள கேரட்டை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். கேரட்டில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. 

👉 தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை மட்டும் சேர்த்து தடவி பாருங்க.. ஒரு முடி கூட உதிராது. 

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு கிண்ணத்தில் நாம் அரைத்து வைத்துள்ள கேரட்டை எடுத்து கொள்ளவும். பின் அதில் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளவும். அடுத்து தேன் 1 ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் கேரட் பேஸ் பேக் தயார். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து குறைந்தது 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும்.

👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement