சருமத்தை பொலிவாக்கும் யோகாசனம்..!

Skin Whitening Yoga Asanas in Tamil

முகம் அழகு பெற யோகா | Skin Whitening Yoga Asanas in Tamil

யோகா பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைவது யோகாசனம் தான். உடலையும், மனதையும் எப்பொழுதுமே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் தினமும் ஏதாவது ஒரு யோகாசனம் செய்து வருவதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். உங்கள் சரும அழகை எப்பொழுதுமே பொலிவாக வைத்துக்கொள்ள சில யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பலன்களை பெற முடியும். அந்த யோகாசனங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

யோகா:

நமது தோல் எப்பொழுதுமே நமது உடலில் நடக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு கண்ணாடியாக இருக்கும். அதாவது நமது உடலில் ஏதாவது கழிவுகள் தங்கி இருந்துச்சுன்னா நமது தோல் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல், சருமத்தில் அங்கங்கே ஒருவித கருப்பு திட்டுக்கள் வர வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதே மாதிரி நமது மனம் சரி இல்லை என்றாலும் சருமம் அழகின்றி காணப்படும். ஆகவே நமது முகத்தை பொலிவாக்கக்கூடிய யோகாசனை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.


திரிகோண ஆசனம் செய்முறை மற்றும் அதன் பயன்கள்:

நேராக நின்றுக் கொண்டு உங்களது வலது காலை நன்றாக முன்னோக்கி விரித்துக் கொள்ள வேண்டும்.

உங்களது வலது இடுப்பினை முன்னோக்கி நகர்த்தி உங்களது வலது தொடையை தொட்டதும், இடது இடுப்பை பின்னோக்கி நகர்த்திக் கொள்ள வேண்டும்.

வலது கையை உங்கள் வலது காலிலும் இடது கையை மேலே நோக்கியும் நீட்ட வேண்டும். உங்களது தலையை நேராக நீட்டி பார்க்க வேண்டும்.

இந்த முறையில் குறைந்தது 30 வினாடிகளாவது இருக்க வேண்டும். அந்த நேரத்தில் நிதானமாக சுவாசத்தினை மேற்கொள்ளுங்கள். பின் பழைய நிலைக்கு வந்துவிட்டு சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்கள்:

இப்படி செய்வதினால், நமது முகத்திற்கு அதிகமான இரத்த ஓட்டம் போகும். இதன் மூலம் நம் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையும் குறையும்.


பவன முக்தாசனம்:

முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரு கால்களையும் மடக்கி முட்டிப் பகுதியை வயிற்றுக்கு அருகே கொண்டுவர வேண்டும். பிறகு, பொறுமையாக கைகளைத் தூக்கி முட்டியை இரு கைகளாலும் நன்கு அணைத்தபடி முட்டியை மார்புக்கு அருகே கொண்டுவர வேண்டும். இயன்றவரை மார்புக்கு நெருக்கமாக முட்டியைக் கொண்டுவர வேண்டும்.

பிறகு தங்கள் தலை பகுதியை தூக்கி முட்டியை தொடுற மாதிரி கொண்டு வர வேண்டும். இந்த நிலையிலேயே 10 விநாடிகள் வரை இருக்க வேண்டும். அல்லது 3 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர், கைகளை மெதுவாக இறக்கிவிட்டு, காலையும் மெதுவாக இறக்க வேண்டும்.

குறிப்பு: கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த யோகா பயிற்சியில் கழுத்து பகுதியை மட்டும் உயர்த்துவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

பயன்கள்:

இவ்வாறு செய்வதினால் முகத்திற்கு சீரான இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் சரும அழகு அதிகரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆசனம் முதுகுவலியை சரிசெய்யக்கூடி ஆசனம் ஆகும்.


பர்வதாசனம்:

விரிப்பில் கவிழ்ந்து படுக்கவும். கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும்.

உள்ளங்கை பகுதியினையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கிய படி முக்கோண வடிவத்தில் படத்தில் உள்ளபடி உயர்த்தவும்.

பின் தலையினை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும்.

இப்படி 20 வினாடிகள் இருந்து பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.

குறிப்பு: இரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலைவலி, கண் நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

பயன்கள்:

இந்த ஆசனம் செய்வதினால் தலை பகுதிக்கு தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்