அடிக்கிற வெயிலிலும் முகம் பளபளன்னு இருக்கணுமா! அப்போ இந்த பேஷியலை ட்ரை பண்ணுங்க..

Advertisement

கோடை காலத்தில் முகம் பளபளன்னு இருக்கணுமா

கோடைக்காலத்தில் பலரும் பல்வேறு வகையான முகப்பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த கோடைக்காலத்தில் வெளியில் செல்லவே முடியாது, அந்த அளவிற்கு முகமானது வெயிலில் வாடிவிடும். முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தேமல் இன்னும் பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் வேலைக்கு செல்கிறவர்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இதனை சரி செய்யும் வகையில் நம்முடைய பதிவில் வீட்டிலையே இயற்கையான முறையில் தயாரிக்க கூடிய பேஸ் பேக்கை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படுத்தி அறிந்து கொள்ளுங்கள்.

வெந்தயம்:

கோடை காலத்தில் முகம் பளபளன்னு இருக்கணுமா

வெந்தயம் ஆனது உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் இந்த பேஸ் பேக்கை தாரளமாக பயன்படுத்தலாம். அதற்கு நீங்கள் முதல் நாள் இரவே வெந்தயத்தையும், நன்னாரியையும் எடுத்து ஊற வைத்து கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த விழுதுகளுடன் ரோஜா இதழ் மற்றும் சந்தன தூள் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடனே எலுமிச்சை தோலை காய வைத்து அதனை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதனையும் அதனுடனே சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பரு, உஷ்ணகட்டிகள், கருவளையம், முஃம் வறண்டு காணப்படுதல் போன்ற பிரச்சனைகள் நீங்கி முகமானது பொலிவாக காணப்படும்.

 வெந்தயத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம், ஜிங்க், Vitamin A, C, K, B6 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நிறைந்துள்ள ஆன்டி பாக்ட்ரியல், ஆன்டி இன்ப்ளமேட்டரி பண்புகள் இருப்பதால் இவை முகத்தில் உள்ள பருக்களை குறைக்க உதவுகிறது. மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குகிறது.  

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

Aloe Vera & Cucumber Face Pack:

கோடை காலத்தில் முகம் பளபளன்னு இருக்கணுமா

கற்றாழையின் தோலை சீவி விட்டு உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் வெள்ளரிக்காயை சின்ன சின்ன பீஸாக நறுக்கி விட்டு அதனை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிக்கட்டி ஜூஸாக எடுத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை & வெள்ளரிக்காய் முகத்தில் தடுவவதன் நன்மைகள்:

வைட்டமின் ஏ, அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் ஆனது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குகிறது. முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைநீக்குறது. வெயிலினால் உங்களது முகமானது சிவந்த நிறத்தில் காணப்படுவதை தடுக்கிறது. வயதான தோற்றத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

வைட்டமின் கே, பொட்டாசியம், மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் ஆனது தோலை புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது. தோலின் எரிச்சல் நிலையை குறைகிறது. சருமத்தில் இருக்கும் பள்ளங்களை நீக்குகிறது

கோடைக்காலத்தில் முடியை பராமரிப்பது எப்படி.?

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!

 

Advertisement