கோடைக்காலத்தில் முடியை பராமரிப்பது எப்படி.?

Advertisement

Summer Hair Care Tips in Tamil at Home

பொதுவாக நாம் அணியும் ஆடையினை பொறுத்தவரை நமக்கு பிடித்த மாதிரியான மாடல் மற்றும் நிறங்களில் தான் அணிகிறோம். அதோடு மட்டுமில்லாமல் நாம் அணியும் ஆடைக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வித்தியாசமான முறையில் ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதன் படி பார்த்தால் நீங்கள் நினைத்த அனைத்தையும் செய்து கொள்ளலாம். ஆனால் ஹேர் ஸ்டைல் மட்டும் உங்களுடைய விருப்பப்படி செய்ய முடியாது.

ஏனென்றால் வித்தியாசமான முறையில் ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு முதலில் நம்முடைய தலையில் போதுமான முடி இருக்க வேண்டும். ஆனால் இதில் தான் பலருக்கும் பல பிரச்சனைகள் காணப்படுகிறது. ஏனென்றால் முடி உதிர்வு என்பது இன்றைய காலத்தில் உள்ள பெண்களுக்கு அதிகமாகி கொண்டே போகிறது. அதிலும் இந்த கோடைக்காலத்தில் முடி உதிர்வு என்பது அதிகமாக இருக்கும். அதனால் இந்த கோடைக்காலத்தில் முடியை பராமரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

இயற்கையான ஷாம்பூ:

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் தான் இயற்கையான ஷாம்புவை பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் எல்லாரும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள். இதனால் முடி வளர்ச்சி அடைந்தாலும் அதனை நிறுத்தினீர்கள் என்றால் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் நெல்லிக்காய், பாதாம், சீயக்காய், கரிசலாங்கண்ணி இயற்கையான பொருட்களை தலையில் தேய்த்து குளியுங்கள்.

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்

ஹேர் பேக்:

நீங்கள் வாரத்தில் ஒரு நாள் இயற்கையான முறையில் உள்ள ஹேர் பேக்குகளை பயன்படுத்த வேண்டும். அதாவது வெந்தயம், செம்பருத்தி இலை, முட்டை, தயிர், கற்றாழை ஜெல் போன்றவற்றால் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தலைக்கு குளியுங்கள். இதில் உங்களுக்கு எது செட் ஆகுமோ அதனை மட்டும் தான் தேய்த்து குளிக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்:

வாரத்தில் 2 நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியமானது. ஏனென்றால் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உங்களின் உடல் சூட்டை தணிக்கும். அதனால் உங்களின் வாழ்க்கை முறையில் இதனை பழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

மேற்கூறியவை எல்லாம் ஒன்று இயற்கையான முறை, மற்றொன்று உங்களின் உடல் சூட்டை தணிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் இந்த கோடைக்காலத்தில் முடியை பாதுகாப்பாக கையாளுங்கள்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!

 

Advertisement