Summer Season Face Brightening Pack in Tamil
முகம் பளபளப்பாக இருப்பதற்காக பலரும் பல கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது மட்டும் முகம் பளபளப்பாக காட்சியளிக்கும். நாளடைவில் முகம் பொலிவிழந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் இந்த வெயிலில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு முகமானது பொலிவிழந்து காணப்படும்.
இந்த வெயிலிலும் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்காக கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தி எந்த வித பலனையும் கொடுக்கவில்லை என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அது என்ன குறிப்பு என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:
- சர்க்கரை – ½ ஸ்பூன்
- காபித்தூள் – ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- தக்காளி – 1
கிரீம் செய்முறை:
முதலில் ஒரு தக்காளி பழத்தை எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தக்காளி பழத்தை மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தனியாக ஒரு பவுலில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த தக்காளி பேஸ்டுடன் சர்க்கரை, மஞ்சள் தூள், காபி தூள் மூன்றையும் சேர்த்து ,நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற கூடாது. கிரீம் பதத்திற்கு இதனை மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..
அப்ளை செய்யும் முறை:
இந்த கிரீமை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்துவதோடு, மட்டுமில்லாமல் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். முகத்தை அடிக்கடி கழுவி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் முகம் பளபளப்பாக இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |