வெயிலில் எவ்வளவு அலைந்தாலும் உங்கள் முகம் கருக்காமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Summer Season Face Whitening Tips

வணக்கம் நண்பர்களே..! வெயில் காலம் வந்தாச்சு. இனி Fan -க்கும் Ac -க்கும் ஓய்வே கிடையாது. சரி இந்த வெயில் காலத்தில் சருமத்தில் பல பாதிப்புகள் வரும். அதாவது வியர்க்குரு, எரிச்சல், அரிப்பு மற்றும் தடிப்பு, கருமை, தோல் வறட்சி போன்ற பல பாதிப்புகள் வரும். அதுபோல இந்த வெயில் காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.

பொதுவாக பெண்கள் அனைவருமே எல்லா நாட்களிலுமே சருமத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இருக்கும் போது வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க பல கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி தடவுவார்கள். அதிலும் வெயில் காலத்தில் முகம் கருத்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல கிரீம்களை பயன்படுத்துவார்கள். அதனால் நாளடைவில் மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் வெயில் காலத்தில் உங்கள் சருமம் கருத்து போகாமல் இருக்க வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டும் போதும். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Summer Season Face Whitening Tips in Tamil:

  1. வேப்பிலை – 10
  2. துளசி – 10
  3. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  4. சந்தனம் – 1 ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

வேப்பிலை எடுத்து கொள்ளவும்:

வேப்பிலை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். பின் அதில் வேப்பிலை 10 அல்லது உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் துளசி இலைகள் தேவையான அளவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

எல்லாரும் உங்கள பாத்து உங்க முடி மாதிரி வளர டிப்ஸ் சொல்லுங்கன்னு கேப்பாங்க அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

பின் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் சந்தன தூள் 1 ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளவும்.

அடுத்து இதில் நாம் அரைத்து வைத்துள்ள வேப்பிலை மற்றும் துளசி பேஸ்டை சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

தோடு பெரியதாக போட்டு காது ஓட்டை பெரியதாகி விட்டதா அப்போ இதை ட்ரை பண்ணுங்க

அப்ளை செய்யும் முறை:

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 3 முறையோ செய்து வந்தால் வெயில் காலத்தில் உங்கள் சருமம் பாதுகாப்பாக இருக்கும். மேலும் இந்த பேஸ்ட் வெயில் காலத்தில் உங்கள் முகம் கருத்து போவதை தடுக்கும். அதனால் இதை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

காது ஓட்டை பெரிதாகி விட்டதே என்று கவலைப்படுபவர்கள் இதை மட்டும் செய்யுங்க நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்

 

உங்கள பாத்து எல்லாரும் இவ்ளோ முடியை எப்படி வளர்த்தீங்கனு கேப்பாங்க அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil