Summer Season Haircut Boys
இந்த வெயில் காலத்தில் வெளியிலும் செல்ல முடியாது, வீட்டிலும் இருக்க முடியாது அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இந்த வெயிலிருந்து நம்ம தற்காத்து கொள்வதற்காக குளிர்ச்சியானவற்றை சாப்பிடுவோம். ஏனென்றால் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் இந்த வெயிலுக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொட்டை அடிக்க சொல்வார்கள். சில நபர்கள் மொட்டை அடிக்க சொல்வார்கள் அதற்கு விருப்பம் இல்லையென்றால் ஹேர் கட் மாற்றி கொள்ளலாம். அதற்கு எந்த மாதிரியான ஹேர் கட் அடிக்க வேண்டும் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் சம்மரில் அடிப்பதற்கான ஹேர் கட்டை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Textured Crop for Men in Summer:
இந்த ஹேர் ஸ்டைல் ஆனது வெயில் காலத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. ஏனென்றால் இதற்கு பராமரிப்பு என்பது குறைவாக தான் இருக்கும். இந்த ஹேர் ஸ்டைல் ஆனது சுற்றிலும் முடியை வெட்டிய பிறகு நடுவில் மட்டும் முடி இருக்கும்.
ஆண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர் கட்
Classic Crew Cut for Men in Summer:
இந்த ஹேர் ஸ்டைல் ஆனது பின் பக்கம் இருக்கும் முடியை லேசாக வெட்டி விட வேண்டும். முன் பக்கத்தையும் லேசாக வெட்டி விட வேண்டும். இப்படி வெட்டுவதால் வேர்க்காது.
Slicked Back Hairstyle for Men in Summer:
இந்த ஹேர் ஸ்டைல் ஆனது முன்பக்கம் மட்டும் நிறைய முடி இருக்கும். இந்த ஹேர் ஸ்டைலை வைப்பதால் வெப்பத்தை தாங்க கூடிய வகையில் இருக்கும்.
Messy Side Part Hairstyle for Men in Summer:
இந்த ஹேர் ஸ்டைல் ஆனது ஒரு பக்கம் முடி அதிகமாக இருக்கும். இந்த ஹேர் ஸ்டைல் வைப்பதால் வெப்பத்தை தாங்க கூடிய வகையில் இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |