Summer Skin Care Tips at Home in Tamil
இந்த வெயில் காலத்தில் வெளியில் போட்டு வந்தாலே முகம் கலையிழந்து போகிவிடும். அதுமட்டுமில்லாமல் முகத்தில் எண்ணெய் வழியும். கோடைக்காலத்தில் முகத்தி எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீமை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை பயன்படுத்தும் போது ரிசல்ட்டை கொடுத்தாலும் சிறிது நேரம் கழித்து முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் இயற்கையான முறையில் இந்த கோடைகாலத்தில் முகத்தை எப்படி பராமரிப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
கோடை காலத்தில் முகத்தை எப்படி பராமரிக்க வேண்டும்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முகத்தை கழுவ வேண்டும்:
கோடை காலத்தில் 3 அல்லது 4 முறை முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய்களை நீக்க பேஸ் வாஸ் முக்கியமானது. இதனால் முகத்தில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது.
மாய்சரைசர் பயன்படுத்தவும்:
மாய்சரைசர், சன் ஸ்கீரின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இந்த வெயில் காலத்தில் சான் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது. இதை எப்படி செலக்ட் செய்வது குழப்பமாக இருக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் ஜெல்லாக பயன்படுத்தவும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் நீர் சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.கற்றாழை பேஸ் மாஸ்க்:
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தை ஈரப்பதமாக்கும். மேலும் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
மஞ்சள் பேஸ் மாஸ்க்:
மஞ்சள் பாக்ட்ரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதனால் இதை முகத்தில் பயன்படுத்தும் போது முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதஹனை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
தயிர் மற்றும் தேன்:
தேன் முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. இதற்கு ஒரு கப் தயிரில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |