கோடையில் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம்? | Summer Skin Care Tips in Tamil

Summer Skin Care Tips in Tamil

பெண்கள் அழகாக என்ன செய்ய வேண்டும் | Sarumam Tips in Tamil 

வணக்கம் நண்பர்களே..! கோடைகாலம் வந்தாச்சு இனி இந்த வெயில் காலத்தில் வெளியில் சென்றால் முகம் கருப்பாக மாறும் அதிகம் சோர்வு வரும் என்பதால் மட்டும் சிலர் வெளியில் செல்லாமல் இருப்பார்கள். இன்னும் சிலருக்கு அலைச்சலால் சோர்ந்து போகுவார்கள். இனி அதனை பற்றி கவலை வேண்டாம். உங்களுக்காக பொதுநலம்.காம் பதிவில் அக்கறை கொண்டு பின் வரும் பதிவை வெளியிட்டு உள்ளது. அதனை வரும் நாட்களில் செய்து வந்தால் நீங்கள் எப்போதும் போல் சாதாரணமாக வெளியில் செல்லாம்.

வெயில் கால டிப்ஸ்

முகப்பரு கரும்புள்ளி நீங்க | Lemon Beauty Tips in Tamil:

Lemon Beauty Tips in Tamil 

கருப்பு என்றால் அழகுதான். ஆனால் முகம் கருப்பாக இருந்தாலும் அதனுடன் சோர்ந்து காணப்படுவதால் முகம் பளிச்சுனு இருப்பதில்லை. அதனால் இந்த மாதிரியான இயற்கை டிப்ஸை செய்து பாருங்கள். ஒரு எலுமிச்சை பழத்தில் முகம் அழகாக தெரியும் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை பின் வரும் டிப்ஸை பார்த்து செய்து பாருங்கள்.

 

டிப்ஸ்: 1

 • வெயிலில் வெளியில் சென்று வீட்டுக்கு வந்த பிறகு ஒரு ஐந்து நிமிடம் எலுமிச்சை சாறை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி ஐந்து அல்லது பத்து நிமிடம் தடவி வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.
 • ஒரு எலுமிச்சை பழத்தில் பாதியாக வெட்டி அதில் சீனி சேர்த்து மெருதுவாக முகத்தில் தடவி வந்தால் முகம் கருமை நீங்கி வெண்மையான முகமாக இருக்கும்.
 • எலுமிச்சை சாறு அதனுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் சுருங்காமல் இளமை தோற்றத்தில் காட்டும். இதனை வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால் கோடைகாலத்தில் சரியான தீர்வு கிடைக்கும்.

கரும்புள்ளி மறைய டிப்ஸ் | Egg White Uses For Face in Tamil:

Egg White Uses For Face in Tamil

முட்டை ஓடை எப்போதும் தூக்கி போடுவோம், இனி தூக்கி போடாமல் கோடை காலத்தில் இந்த மாதிரி முகத்தில் செய்து பாருங்கள்.

டிப்ஸ்: 2

 

 • ஒரு முட்டை ஓடு, முட்டை வெள்ளைக்கரு, சிறிது எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும்.
 • முதலில் முட்டை ஓடினை நன்கு கழுவி எடுத்து காயவைத்து பிறகு அதனை கடாயில் வறுத்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
 • பின் அதனுடன் வெள்ளைக்கருவை சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் நன்கு தடவி 15 நிமிடம் காயவைக்கவும்.
 • பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் வெயில் காலத்தில் சோர்ந்து இருந்த முகம் வெண்மையாகவும், கரும்புள்ளியும் மறையும்.
1 முறை ட்ரை பண்ணுங்க..! முகம் தங்கம் போல் மின்னும்..!

பருக்கள் நீங்க என்ன செய்ய வேண்டும் | Muga Parukkal Maraiya

 • ஒரு 2 ஸ்பூன் தயிர் எடுத்துக்கொள்ளவும். பின் அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும்.
 • வெளியில் செல்வதால் முகத்தில் உள்ள செல்கள் இறந்து சோர்ந்த நிலையில் இருக்கும். அதற்கு இந்த காஸ்தூரி மஞ்சள், தயிர் பொலிவு கொடுத்து புத்துணர்ச்சி தரும் இதனால் முகம் பொலிவாகவும் அழகாகவும் இருக்கும்.
 • இரண்டு ஸ்பூன் தயிர் எடுத்துக்கொள்ளவும், பின் அதில் கடலை மாவு, தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் இயற்கையாக இருப்பது போல் இருக்கும். இது போல் செய்து வர எந்த ஒரு பக்க விளைவுகளும் வராது.

வெள்ளரிக்காய் அழகு குறிப்பு:

வெள்ளரிக்காய் அழகு குறிப்பு

 • வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். அதன் சாறை முகத்தில் தடவி வருவதால் அதில் உள்ள சத்துக்கள் முகத்திற்கும் சரி உடலுக்கும் சரி ஏராளமான நன்மைகளை தருகிறது.
 • அதில் உள்ள நீரை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பிசுபிசுப்புகள் நீங்கி முகம் இயற்கையாக உள்ளது போல் காணப்படும்.
 • வெயிலில் வெளியில் செல்வதால் முகத்தில் கருவளையம் வரும். அது மறைய வெள்ளரிக்காயை துண்டாக வெட்டி கண் மீது 15 நிமிடம் வைத்து எடுத்தால் கண் குளிர்ச்சி பெற்று கருவளையம் மறைய உதவுகிறது.

கற்றாழை அழகு குறிப்புகள்:

கற்றாழை அழகு குறிப்புகள்

 

 • கற்றாளை ஒரு பாதியாக நறுக்கி கொள்ளவும் அதன் மீது தேன் சேர்த்து முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பின் 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும் முகம் எப்போதும் எண்ணெய் வழியாமல். குளிர்ச்சியான உடல்  நிலையை தரும்.
 • கற்றாளையை நறுக்கி சாதாரணமா முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சினு இருக்கும். இது போல் வாரத்தில் 3 நாட்கள் தடவி வந்தால் இயற்கையாய் முகம் இருப்பது போல் முகம் மென்மையாக இருக்கும்.
 • வெயிலில் வெளியில் செல்பவர்கள் தினமும் செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நிங்கும் இறந்த செல்கள் புத்துணர்ச்சி பெற்று முகம் பொலிவு தரும்
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil