வெயிலினால் முகம் கருத்து போனால்..! இரண்டு நாட்களில் கருமையை நீக்க டிப்ஸ்

summer tips for oily skin in tamil

வெயிலில் முகம் கருக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

நண்பர்களே ஹாய் அனைவருக்கும் அன்பு வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் வெயிலில் செல்வதனால் முகத்தில் கருமை ஏற்படும். அதனால் அதிகளவு யாரும் வெயிலில் செல்ல மாட்டார்கள். இதற்காக அவர்களின் வேலையை விட்டுவிட்டு வீட்டில் எவ்வளவு நாட்கள் இருப்பார்கள் அது மிகவும் கடினமான ஒன்று அதற்காகத்தான் இனி வீட்டை விட்டு வெளியில் சென்று வருபவர்களின் முகம் அழகாக இருக்க சூப்பரான பதிவாக இருக்கும் சரி வாங்க அதற்கான டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

வெயிலில் முகம் கருக்காமல் இருக்க:

டிப்ஸ் -1

சிவப்பு துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

கற்றாழை ஜெல் – சிறிதளவு

தக்காளி சாறு – சிறிதளவு

சிவப்பு நிற துவரம்பருப்பை எடுத்துக்கொள்ளவும். அதனை சிவப்பு மைசூர் பருப்பு என்று கூறுவார்கள். இந்த பருப்பை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி சாறு சிறிதளவு கலந்து கொண்டு குழைத்து முகம் முழுவதும் தடவி பேக் போல 30 நிமிடம் ஊறவிடவும். இதனை 2 நாட்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

டிப்ஸ் -2

இந்த பிரச்சனை அனைவரும் இருக்கும் அதாவது வெயிலில் வெளியில் சென்று வந்தால் கண்களில் கருமை அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனை முகத்தை விட அதிகளவு கண்களை தான் அதிகம் பாதிக்கும். ஆகவே வெயில் படும் இடங்களில் தயிரை எடுத்துக்கொண்டு வெயில் படும் இடமெங்கும் தடவி 20 நிமிடம் உலரவிட்டு தண்ணீரால் கழுவினால் முகம் மற்றும் உடலில் உள்ள கருமை மறையும்.

டிப்ஸ் -3

இந்த பொருட்களை வீட்டில் அனைவருமே வாங்கி சமையலுக்கு பயன்படுத்துவார்கள். அது என்னவென்றால் காய்கறிகள் பொதுவாகவே பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளுக்கு கருமையை நீக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.

ஆகவே முட்டைகோஸில் உள்ள இலையை சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து பின்பு  அதனை எடுத்து முகத்தின் மீது அரை மணி நேரம் வைக்க வேண்டும்.  இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தின் கருமை மறைந்துவிடும்.

டிப்ஸ் -4

தூங்க செல்லும் முன் முகத்தில் சிறிதளவு பன்னீரை முழுவதும் தடவி அப்படியே தூங்கிவிடுங்கள் மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள் முகம் பொலிவு பெற்று பளிச்சென்று இருக்கும்.

டிப்ஸ் -5

  • எலுமிச்சை சாறு
  • தயிர்

இந்த இரண்டு பொருட்களையும் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறுவதை நீங்களே உணர்வீர்கள். இப்படி செய்வதனால் சூரியனினால் ஏற்படும் கதிர்விச்சு காரணமாக ஏற்படும் கருமை தீரும்.

15 நாளில் கொட்டிய முடி வளர இத மட்டும் செய்ங்க

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami