வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்.

Updated On: April 17, 2024 6:43 PM
Follow Us:
Sunscreen lotion benefits in tamil for skin
---Advertisement---
Advertisement

Sunscreen Lotion Benefits in Tamil for Skin

சூரிய ஒளி என்ன தான் நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தாலும், வெயில் காலத்தில் அதனுடைய தாக்கமானது அதிகமாக இருக்கும். இதனால் உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் ஆனது நமது தோலிற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நம்முடைய தோலில் எந்த பிரச்சனையும் வராமல் இருப்பதற்காக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவார்கள். இதனை எதனால் பயன்படுத்துகிறோம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

UV கதிர்கள்:

சன்ஸ்கிரீன் நன்மை

சூரியன் ஆனது நமது சருமத்தை பாதிக்கும் UVA மற்றும் UVB என இரண்டு வகையான கதிர்களை வெளியிடுகிறது. இதில் UVA  கதிர்கள் ஆனது தோலில் சென்று வயதான தோற்றத்தையும், சுருக்கத்தையும் ஏற்படுத்த கூடியது. UVB ஆனது புற்றுநோய் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

எரிச்சல்:

பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கமானது அதிகமாக காணப்படும். இதனால் தோல் ஆனது எரிச்சலடையும். இதனை தடுப்பதற்கு சன் ஸ்கிரீனை பயன்படுத்தினால் எரிச்சல் அடையாது.

வயதான தோற்றம்:

சன்ஸ்கிரீன் நன்மை

சூரிய ஒளி அதிகமாக நம்முடைய தோல் மீது பட்டால் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் முகத்தில் பருக்கள், சுருக்கங்கள் இன்னும் பல சரும பிரச்சனைகள் ஏற்படும். அதனால் சன் ஸ்கிரீனை பயன்படுத்துவதால் மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தோல் புற்றுநோய்:

புற ஊதா கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படும். இதனை தடுப்பதற்கு சன் கிரீனை பயன்படுத்துவது அவசியமானது. வெயில் அதிகமாக படும் இடமான முகம், கைகள் போன்ற பகுதிகளில் சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு:

இந்த சூரிய ஒளி கதிர்களால் நம்முடைய தோலிற்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த தோல் பிரச்சனைகள் எல்லாம் வராமல் இருக்க வேண்டும் என்றால் சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது அவசியமானது. இதனை நீங்கள் தினமும் பயன்படுத்தி வந்தால் நம்முடைய தோலை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!