எப்புரா..! இப்படி வளர்ந்துச்சுனு நீங்களே யோசிக்கிற அளவிற்கு முடி வளர இதை மட்டும் செய்யுங்க..!

Advertisement

Thalai Mudi Adarthiyaga Valara Tips in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களது தலைமுடியை நன்றாக பராமரித்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஏனென்றால் நமது தலைமுடி தான் நமக்கு மிகுந்த அழகினை அளிக்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அழகினை சேர்ப்பது தலைமுடி தான். அப்படி நமது அழகினை மேம்படுத்து உதவும் தலைமுடி அதிக அளவு உதிர்வது அல்லது சரியாக வளரவில்லை என்றால் நமக்கு மிக மிக கஷ்டமாக இருக்கும். அதனால் அதனை நன்கு வளர வைப்பதற்கு நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு பலனளிக்காமல் போகிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்க உதவும் சில குறிப்பினை பற்றி பார்க்க போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Grow Hair Faster at Home Remedies in Tamil:

How to Grow Hair Faster at Home Remedies in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலைமுடி உதிர்வது மற்றும் உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளராமல் போவது தான்.

அதனால் அதனை போக்குவதற்கு உதவும் சில குறிப்புகளை இங்கு பதிவிட்டுள்ளோம்.

குறிப்பு – 1

முதலில் இந்த குறிப்புக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. நெல்லிக்காய் – 10
  2. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  3. கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி அளவு
  4. தேங்காய் எண்ணெய் – 500 மி.லி

வெறும் 10 ரூபாய் செலவிலேயே சுருட்டை முடியை நேராக மாற்றிவிடலாம்

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 10 நெல்லிக்காய்களையும் அதில் உள்ள விதையினை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள 10 நெல்லிக்காய் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பிறகு அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இதனை தினமும் உங்களின் தலையில் தடவி 10 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களின் தலைமுடி கூடிய விரைவில் நன்கு நீளமாக வளரும்.

இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்

குறிப்பு – 2

Thalai Mudi Valara Tips in Tamil

முதலில் இந்த குறிப்புக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஆளி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
  2. வெந்தயம் – 2 டீஸ்பூன்
  3. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  4. ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  5. தண்ணீர் – 2 கப்

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள், 2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி அதனுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இதனை உங்களின் தலைமுடியின் வேர்களில் படுமாறு தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி வளர்வதை நீங்களே காணலாம்.

இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்க முதுமையில் கூட நரைமுடி வராது

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement