Hair Growth Tips at Home in Tamil
நண்பர்களே வணக்கம்..! இன்று நாம் தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வை பற்றி தான் பார்க்க போகிறோம். தலை முடி பிரச்சனை அனைத்திற்கும் தனி தனியாக டிப்ஸை செய்து வருகிறோம் ஆனால் அனைத்து பிரச்சனைக்கும் ஒரே மருந்தாக இருந்தால் நல்லது.
நமக்கும் வேலை மிச்சம், நேரமும் மிச்சம் ஆகும் அல்லவா? ஆகவே நாம் Pothunalam.com பதிவில் தினமும் தலை முடி பிரச்சனை ஒவ்வொருக்கும் தனியாக ஒரு டிப்ஸை பதிவிட்டு கொண்டடு வருகிறோம் அதனை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
Thalai Mudi Valara Tips in Tamil:
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
ஹர் டையை தூக்கி போடுங்க.! இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம் 100% ரிசல்ட்
தேவையான பொருட்கள்:
- ஒரு மூடியில் பாதி அளவு தேங்காய்
- முட்டை – 1
- கற்றாழை – 1
செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் தேங்காயை எடுத்து துருவிக்கொள்ளுங்கள் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு தேய்காய் அரைப்பதற்க்காக அதில் 1/4 கப் அளவிற்கு பசும் பால் சேர்த்து அரைக்கவும். அரைப்பது கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
அரைத்த தேங்காய் துருவலை பாலாக மாற்றுவதற்கு ஒரு துணியில் தண்ணீர் சேர்க்காமல் துருவலை சேர்த்து பால் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அது கொஞ்சமாக இருந்தாலும் அப்படியே எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
இப்போது கற்றாழை எடுத்து அதில் உள் இருக்கும் ஜெல்லை எடுத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 4
எடுத்துவைத்த ஜெல்லை மிக்சியில் போட்டு அதனுடன் எடுத்துவைத்த முட்டையை சேர்த்துக்கொள்ளவும். இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். முட்டை நாற்றம் வரும் என்று கவலை வேண்டாம். அப்படி எதுவும் வராது.
ஸ்டேப்: 5
முன்பு தேங்காய் பால் எடுத்துக்கொண்டோம் அவ்வளவா அதனை எடுத்து லைட்டாக சூடு செய்து தனியாக வைக்கவும்.
இதையும் செய்துபாருங்கள் 👉👉 30 நாள் challenge முடியை இரண்டு மடங்கு வேகமாக வளர வகைக்கும் ஹேர் ஸ்ப்ரே..!
ஸ்டேப்: 6
இப்போது கற்றாழை ஜெல், முட்டை அரைத்துவைத்தோம் அல்லவா அதனுடன் சூடு செய்த தேங்காய் பாலை எடுத்து அதனுடன் சேர்த்து ஒருமுறை அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 7
இப்பொது அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட் மூன்று பேர் தேய்த்துக்கொள்ள முடியும். தலைக்கு தேய்ப்பது என்பது தான் இதற்கு முக்கியம்.
தலைக்கு தேய்ப்பதற்க்கு முன்னால் தலையை சீவி கொள்ளவும் அதன் பின் ஒரு ஒரு பாதியாக எடுத்து தலையின் வேர்வரை தேய்த்துக்கொள்ளவும்.
இதனை வாரத்திற்கு 3 மூன்று முறை செய்தால் பொடுகு வராது, முடி மிருதுவாக இருக்கும், மிகவும் கருமையான தோற்றத்தை அளிக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |