முடி மிருதுவாக இருக்க | Thick Hair Growth Tips in Tamil
தலை முடி பிரச்சனை தான் தீர்க்க முடியாத பிரச்சனை என்று சொல்லி தினமும் நிறைய விதமான எண்ணெய்களையும் ஷாம்புக்களை வாங்கி தடவி வருகிறோம்..! ஆனால் அதனை தடவும் கொஞ்ச நாட்கள் வரை எந்த ஒரு ரிசல்ட்டும் இருக்காது. அதன் பின் நாம் பயன்படுத்தும் பொருட்களை விட்டுவிடுவோம். ஆனால் அது உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் செயற்கை பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில் இயற்கை சார்ந்த பொருட்களை வைத்து தலை முடி எப்படி வளர வைப்பது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
Thick Hair Growth Tips in Tamil:
தேவையான பொருட்கள்:
- பச்சை பயிறு – 2 கைப்பிடி
- முட்டை – 2
- தேங்காய் – 1 முடி
ஸ்டேப்: 1
முதலில் பச்சை பயிரை 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதன் பின் ஒரு காட்டன் துணியை நனைத்து அந்த பயிரை தண்ணீர் இல்லாமல் 8 மணி நேரம் கட்டி வைக்கவும்.
ஸ்டேப்: 2
பின்பு 8 மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தல் பயிரில் வெள்ளையாக முளைத்து வந்திருக்கும். அதனை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
ஸ்டேப்: 3
அது பின் தேங்காய்யை துருவி அதனையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஸ்டேப்: 4
அரைத்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு காட்டன் துணியை வைத்தோ அல்லது வடிகட்டியை வைத்தோ வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இப்படி செய்வதால் தலையில் தேய்த்து குளிக்க ஈசியாக இருக்கும்.
ஸ்டேப்: 5
இப்போது வடிகட்டிய பேஸ்ட்டில் முடி மிருதுவாக இருக்க இந்த ஒரு பொருள் போதும் அது தான் முட்டை அதனை உடைத்து அந்த பேஸ்ட்டில் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
பயன்படுத்தும் முறை:
தலை குளிக்கும் முன்பு இரவே தலையில் எண்ணெய் தேய்த்து முடியை சிக்கு எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்டை மறுநாள் செய்து அதனை பின் தலையின் வேர்வை அப்ளை செய்யவேண்டும். முடியின் முழுவதும் தேய்க்க வேண்டும். அது பின் சீயக்காய், ஷாம்பு எது வேண்டுமானாலும் தேய்த்து குளிக்கலாம்.
இதையும் தெரிந்துகொள்ளலாம் 👉👉 கேரளா பெண்களின் தலை முடி அதிசயம் இது தானா..?
இதனையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வாரம் 1 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடியை அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் இருக்க செய்யும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |