வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் தலையில் பொடுகு தொல்லை அதிகமாக உள்ளதா..? அப்போ இதை மட்டும் ஒரே ஒரு முறை தடவுங்க உங்கள் வாழ்நாள் முழுவதும் பொடுகு தொல்லையே இருக்காது..!

Updated On: March 28, 2023 7:40 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Tips for Dandruff Free Hair at Home in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் தலை முடி என்பது அவர்களுக்கு அழகினை கூட்டி காட்டக்கூடிய ஒரு விஷயமாகும். அதனால் அதனை பராமரிப்பதில்    அனைவருமே மிக கவனமாக இருப்பார்கள். ஆனால் இன்றைய சூழலில்  நமது தலையை பராமரிப்பதற்கு கூட நேரமில்லை. அதனால் தான் நமது தலையில் சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பொடுகு, பேன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

அதனை போக்குவதற்காக நீங்களும் பல வகையான செயற்கையான ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்காது. மாறாக பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் தலையில் உள்ள பொடுகினை எவ்வாறு நீக்குவது என்பதற்கான குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Permanent Solution for Dandruff at Home in Tamil:

Permanent Solution for Dandruff at Home in Tamil

இயற்கையான முறையில் உங்கள் தலையில் உள்ள பொடுகினை எவ்வாறு நீக்குவது என்பதற்கான குறிப்பினை பற்றி விரிவாக பார்க்கலாம். அதற்கு முதலில் தேவையான பொருளை பற்றி காணலாம்.

  1. தேயிலை எண்ணெய் (Tea Tree Oil) – 250 மி.லி 
  2. வேப்ப எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு – 1 டீஸ்பூன் 
  4. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  5. கையாந்தரை இலை – 1 கைப்பிடி அளவு

பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 250 மி.லி தேயிலை எண்ணெயை (Tea Tree Oil) ஊற்றி நன்கு சூடுபடுத்துங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளையும் 1 மணிநேரத்தில் வேரிலிருந்து கருமையாக மாற்ற டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்

வேப்ப எண்ணெயை கலக்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெயை சேர்த்து நன்கு சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

மிளகினை சேர்த்து கொள்ளவும்:

இவை இரண்டும் நன்கு கொதித்த பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மிளகினை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து இதனையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

கருவேப்பிலையை சேர்க்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து விட்டு சேர்த்து  கொதிக்க விடுங்கள். இதனால் கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் அதனுடன் கலந்து விடும்.

கையாந்தரை இலையை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக இவற்றுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கையாந்தரை இலையை நன்கு சுத்தம் செய்து விட்டு சேர்த்து கொதிக்க விடுங்கள். பின்னர் இதனை வடிக்கட்டி உங்கள் தலை முடியின் வேரில் படுமாறு தடவி நன்கு மசாஜ் செய்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் தலையில் உள்ள பொடுகு, பேன் போன்றவை நீங்கி தலை முடி நன்கு ஆரோக்கியத்துடன் வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள்(Natural Beauty Tips)

அணைத்து அழகு குறிப்புகள் ஒரே இடத்தில் | All Beauty Tips in Tamil Language

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!! Face Hair Removal Home Tips Tamil..!

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

முகப்பரு வராமல் முகத்தை பொலிவாக வைத்திருக்க இந்த ஒரு பொருள் போதும்

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

பெண்கள் புருவ முடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Anjana Kal Hair Dye in Tamil

ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது

Paati Vaithiyam For Hair Growth in Tamil

முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம் | Paati Vaithiyam For Hair Growth in Tamil