Tips for Glowing Skin at Home in Tamil
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி தங்களின் முகம் என்றும் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். அப்படி உங்களுக்கும் உங்களின் முகம் நன்கு பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள சில டிப்ஸ்களை பயன்படுத்தி உங்களின் முகத்தை என்றும் இளமையாகவும் பொலிவுடனும் பராமரித்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Your Skin Glow Naturally at Home in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கற்றாழை பொடி – 100 கிராம்
- ரோஜா இதழ் பொடி – 100 கிராம்
- ஓரிதழ் தாமரை பொடி – 100 கிராம்
- குப்பைமேனி பொடி – 100 கிராம்
- ஆவாரை பொடி – 100 கிராம்
- துளசி பொடி – 50 கிராம்
- ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன்
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் கற்றாழை பொடி, 100 கிராம் ரோஜா இதழ் பொடி, 100 கிராம் ஓரிதழ் தாமரை பொடி, 100 கிராம் குப்பைமேனி பொடி, 100 கிராம் ஆவாரை பொடி மற்றும் 50 கிராம் துளசி பொடி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் முகத்தில் பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்
பின்னர் அதனை கண்ணாடி அல்லது ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் கலந்து வைத்துள்ள பொடியிலிருந்து 2 டீஸ்பூன் மட்டும் எடுத்து அதனுடன் 3 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் என்றும் இளமையாக இருப்பதை நீங்களே உணரலாம்.
Tips for Glowing Skin Naturally at Home in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- ரோஜா இதழ் பொடி – 2 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கிளிசரின் – 1 டீஸ்பூன்
- வைட்டமின் E கேப்சூல் – 2
இதையும் படித்துப்பாருங்கள்=> உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்
முதலில் 2 டீஸ்பூன் ரோஜா இதழ் பொடி, 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் என்றும் இளமையாக இருப்பதை நீங்களே உணரலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |