Tips To Make Your Fingers Look Beautiful In Tamil
பெண்கள் தங்கள் முகம் பொலிவாக இருக்க பல்வேறு அழகு பொருட்களை பயன்டுத்துவார்கள். பெண்களின் முகம் மட்டும் இல்லாமல் தங்கள் கைகளும் கை விரல்களும் அழகாக இருக்க பல்வேறு நக பாலிஷ்கள் பயன்படுத்துவார்கள். விரல்களை பராமரிப்பதற்கு என்றே தனி நேரம் செலவிடுவார்கள். உங்கள் விரல்களை எப்படி எல்லாம் அழகாக வைத்துக்கொள்ளலாம், எந்த மாரியான நக பாலிஷ்கள் பயன்படுத்தலாம் என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
பெண்கள் தாங்கள் உடுத்தும் ஆடை நிறத்திற்கு ஏற்றவாறு நக பாலிஷ்கள் அணிவார்கள். வெவ்வேறு வெவ்வேறு வண்ணம் உடைய நக பாலிஷ்களை செலவழித்து வாங்குவார்கள். பெண்கள் எந்த அளவிற்கு தங்கள் முகத்தின் மேல் அக்கறை கொள்கிறார்களோ அதற்கு மேலே தங்கள் நகத்தின் மீது அக்கறை கொள்கிறார்கள். எனவே இன்றைய பதிவில் தங்கள் கை விரல்களை எப்படி அழகாக வைத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
How To Use Soap Nut For Face In Tamil
கைவிரல் அழகு குறிப்பு:
முட்டையின் வெண்கரு:
பாலாடையும் முட்டையின் வெண்கருவையும் நன்கு கலந்து இரவில் கைவிரல்களில் அப்ளை செய்ய வேண்டும். காலையில் கைவிரல்களில் பச்சை பயிறு மாவு அப்ளை செய்து கைகளை கழுவ வேண்டும். இந்த கலவையை முழங்கை வரை கூட அப்ளை செய்யலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கைகளும் கைவிரல்களும் பொன்னிற நிறத்தில் காட்சி தரும்.
பாதம் எண்ணெய் மற்றும் கடலை மாவு:
விரல் நகங்களில் பாதம் எண்ணெய் தளர அப்ளை செய்து அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு கடலை மாவு அப்ப்ளி செய்து நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் பிரகாசமாக இருக்கும்.
பால்:
பாலை நன்கு கொதிக்க வைத்து விடவும், பிறகு பால் லேசான சூட்டில் இருக்கும் போது, நகங்கள் அதில் படுமாறு நனைக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான பஞ்சை வைத்து நகங்களை துடைக்க வேண்டும். அதற்கு பிறகு நீங்கள் நக பாலிஷ்கள் பயன்டுத்தினால் நகங்கள் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
எந்த நிறம் உடையவர்கள் எப்படி நக பாலிஷ்கள் அணிய வேண்டும்:
- கைவிரல்களுக்கு நக பாலிஷ்கள் அணியும் போது நம் உடுத்தும் உடை மற்றும் நம்முடைய நிறத்தை பொருத்தவாறு தான் வண்ணக் கலவையை (நக பாலிஷ்) பயன்படுத்த வேண்டும்.
- சிவந்த நிறமுடைய பெண்கள் அழுத்தமான வண்ணங்களில் உள்ள நக பாலிஷ்களை உபயோகிப்பது அழகாக இருக்கும்.
- கருப்பு நிறம் உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களில் நக பாலிஷ் உபயோகிக்க கூடாது. நகங்களின் இயற்கை வண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நக பாலிஷ் உபயோகித்தால் தான் எடுப்பாகவும் அழகாகவும் இருக்கும்.
- ஒவ்வொரு முறை நக பாலிஷ் அணியும் போதும் ஏற்கனவே அணிந்திருந்த நக பாலிஷை நக பைல் ரிமூவர் பயன்படுத்தி அகற்றி விட்டு தான் புதிதாக நக பாலிஷ் அணிய வேண்டும்.
- சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்து காணப்படும். குளித்தவுடன் நகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் உடையாது.
- நகங்களில் தேங்காய் எண்ணெயை தடவி விட்டு சிறிது நேரம் கழித்து நகங்களை வெட்டினால் அழகாக வெட்டலாம்.
How To Make Herbal Shampoo At Home In Tamil
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |