தக்காளி பேஸ் பேக் – Tomato Face Pack for Skin Whitening in Tamil
கோடை காலம் ஸ்டாட் ஆகிடிச்சி.. இந்த நேரத்துல நாமதான் நம்ம முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும். ஆக இந்த கோடை காலத்திற்கு ஏற்ற முகத்திற்கு மிகவும் சூப்பரான ரிசல்ட்டை தரக்கூடிய இரண்டு வகையான பேஸ் பேக்கை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். இந்த இரண்டு பேஸ் பேக் ரெமடியும் உங்கள் முகத்திற்கு ஹெல்தியான மற்றும் Glowing ஸ்கினை கொடுக்கும். இது தவிர உங்கள் முகம் வெள்ளையாகும், முகத்தில் உள்ள கருமைகள் நீங்கும், முக வறட்சி நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும். சரி வாங்க அந்த இரண்டு பேஸ் பேக் என்னென்ன, அதனை எப்படி முகத்தில் அப்ளை செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தக்காளி பேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
- தக்காளி – 1/2
- தேன் – 2 ஸ்பூன்
தயார் செய்யும் முறை:
தக்காளி பழத்தை பாதி அளவு கட் செய்து அதனை மிக்சியில் நன்றாக பேஸ்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதனை வடிகட்டி அவற்றில் இருக்கும் ஜூஸை மட்டும் மதியாக ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள், பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அவ்வளவு தான் பேஸ் பேக் தயார் இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும், பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இவ்வாறு தினமும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் முகம் Glowing-ஆ இருக்கும். மேலும் தக்காளி முகத்தில் இருக்கும் கருமையை போக்க மிகவும் உதவியாக இருக்கும் ஆக இந்த டிப்ஸை கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்.
மஞ்சள் பேஸ் பேக்:
மஞ்சள் ஒரு கிருமி நாசினி பொருளாக கருதப்படுகிறது, இந்த மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பிரச்சனைகள் அனைத்தையும் போக்கி சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளும். இத்தகைய மஞ்சளை மட்டும் முகத்தில் நேரடியாக பயன்படுத்தாமல் அதனுடன் சில பொருட்களை சேர்த்து முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். சரி வாங்க
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலை சீவும் போது சீப்பு முழுவதும் முடியாக உள்ளதா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சீப்பில் ஒரு முடிகூட வராது..!
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் – ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – மூன்று ஸ்பூன்
- தேன் – ஒரு ஸ்பூன்
தயார் செய்யும் முறை:
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும் அதில் மஞ்சள் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு மூன்று ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் பேஸ் பேக் தயார்.
இந்த பேஸ் பேக்கை முகத்தை அப்ளை செய்து 20 நிமிடம் காத்திருக்கவும், 20 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த பேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள், கரும்புள்ளிகள், கருவளையம், சரும வறட்சி ஆகிய அனைத்து சரும பிரச்சனையும் நீங்கி. சருமம் வெள்ளையாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த வெயில் காலத்திலும் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |