வீட்டிலேயே ஈஸியா தக்காளி பேசியல் பண்ணலாம்!

Advertisement

Tomato Facial at Home in Tamil!

வணக்கம்! பல பெண்கள் முகத்திற்கு பேசியல் செய்ய பார்லர்களை தேடி செல்கின்றனர். பார்லர்களில் பேசியல் செய்ய பயன்டுத்தும் கிரீம்கள் கெமிக்கல் கலந்து தயாரிக்கப்படுகின்றன. அவை உங்களின் சருமத்தில் பல பக்க விளைவுகளை  உண்டாக்கும் . எனவே இயற்கை முறையில் வீட்டிலையே தக்காளியினை பயன்படுத்தி முகத்திற்கு பேசியல் செய்யலாம்! இவ்வாறு செய்வதால் உங்கள் சருமத்திற்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது! செயற்கை முறைகளை காட்டிலும் இயற்கை முறையில் முகத்திற்கு அழகு சேர்ப்பதுதான் ஆரோக்கியமானது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்! இப்பதிவில் தக்காளியினை கொண்டு முகத்திற்கு எவ்வாறு பேசியல் செய்யலாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்!

தக்காளி முகத்திற்கு

இந்த தக்காளி பேசியல் 5 செய்முறைகளை கொண்டது.

 1. Cleanser
 2. Steam
 3. Scrub
 4. Massage
 5. Face Mask

தேவையான பொருட்கள்:

 • தக்காளி – 1
 • பால் – 2 டீஸ்பூன்
 • சர்க்கரை – 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
 • ஆலிவ் ஆயில் – 1/4 டீஸ்பூன்
 • தயிர் – 1 டீஸ்பூன்
 • முல்தானி மெட்டி – 1 டீஸ்பூன்
 • ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
 •  கடலை மாவு – 1 டீஸ்பூன்

 tomato facial at home in tamil

தக்காளியினை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். அதனுள் ஒரு துண்டை மட்டும்  தனியாக  முகத்திற்கு ஸ்க்ரப் செய்ய எடுத்து வைத்துவிட வேண்டும். வெட்டிய தக்காளி துண்டுகளை மிக்ஸியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு பயனுள்ள தகவல்👉 தக்காளியை வைத்து முகத்தை ஜொலிக்க வைக்கும் சூப்பர் டிப்ஸ்..! Tomato Beauty Tips In Tamil..!

Homemade Cleanser

Homemade Cleanser

ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் தக்காளி பேஸ்ட் மற்றும் 2 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். பின் 2 நிமிடங்கள் கழித்து  சிறுது நேரம் லேசாக நல்ல மசாஜ் கொடுத்து கழுவ வேண்டும்.

Steamer for Face

Steamer for Face

ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு ஆவாரம் பூ அல்லது பட்டை அல்லது பிரியாணி இலை சிறிதளவு சேர்த்து முகத்திற்கு Steam செய்ய வேண்டும்.

Face Scrub Homemade

Face Scrub Homemade

ஸ்க்ரப் செய்ய சிறு தக்காளி துண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சர்க்கரை,மஞ்சள் தூள் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்க்கவும். இதனை முகத்திற்கு அப்ளை செய்து 5 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 10 நிமிடங்கள் கழித்து முகத்தினை கழுவ வேண்டும்.

Massage for Face

Massage for Face

மசாஜ் செய்ய ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் தக்காளி பேஸ்ட் மற்றும் தயிர் சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை நல்ல மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

Easy Homemade Face Mask

Easy Homemade Face Mask

ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 2 டீஸ்பூன் தக்காளி பேஸ்ட்,  1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் , மற்றும் 1 டீஸ்பூன் கடலை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பின் சிறுது நேரம் லேசான மசாஜ் கொடுத்து கழுவ வேண்டும்.

மேலும் ஒரு பயனுள்ள தகவல்👉 ஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! Beauty Tips In Tamil..!

இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami

 

 

 

 

Advertisement