Traditional Homemade Herbal Bath Powder in tamil
ஹாய் நண்பர்களே..! அனைவருக்குமே நமது முகம் நன்கு பொலிவுடனும், பளபளப்பாகவும் மின்ன வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் நீங்களும் முகம் பளபளப்பாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பல முயற்சிகளை செய்திருப்பீர்கள். ஆனால் அவையாவும் நீங்கள் எண்ணிய அளவிற்கு நல்ல பலனை அளித்திருக்காது.
ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள மூலிகை பொடியை தயாரித்து அதனை உங்களின் முகத்தில் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம். அது என்ன மூலிகை பொடி அதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Herbal Bath Powder in Tamil:
முதலில் இந்த குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- ஆவாரம்பூ – 50 கிராம்
- கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
- பூலாங்கிழங்கு – 100 கிராம்
- கோரைக்கிழங்கு – 100 கிராம்
- வெட்டிவேர் – 30 கிராம்
- சம்பங்கி விதை – 100 கிராம்
- மகிழம்பூ – 100 கிராம்
- வேப்பிலை – 40 கிராம்
- பாசிப்பருப்பு – 100 கிராம்
- வெந்தயம் – 20 கிராம்
- பன்னீர் ரோஜா இதழ்கள் – 1 கைப்பிடி அளவு
- ஆரஞ்சு தோல் 1 கைப்பிடி அளவு
செய்முறை:
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு நிழலில் உலரவைத்துகொள்ளுங்கள். பின்னர் அவை அனைத்தையும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த இந்த பொடியை காற்றுப்புகாத மூடிபோட்ட பாத்திரத்தில் கொட்டிவைத்து, தினமும் நீங்கள் குளிப்பதற்கு முன்னால் இந்த பொடியில் இருந்து 2-3 டீஸ்பூன் எடுத்து சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பின்னர் குளித்து பாருங்கள், உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
இதையும் படியுங்கள்=> உங்கள் முகம் மற்றும் உடல் முழுவதும் பளபளப்பாக மாற இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |