வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 நிமிடத்தில் முகம் பொலிவாக இந்த ஒரு பேக் மட்டும் போதும்

Updated On: June 30, 2025 2:45 PM
Follow Us:
turmeric face pack tamil
---Advertisement---
Advertisement

Turmeric Face Pack Tamil

மஞ்சள் ஆனது இயற்கையாக கிடைக்க கூடிய பொருளாக இருக்கிறது. இதனை பயன்படுத்துவதால் முகம் பளபளப்பாகிறது, பருக்கள் நீங்குகிறது. கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. நம்முடைய சருமத்தில் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒன்று மட்டும் போதும். இதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்வோம்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேஸ் பேக்:

ஒரு பவுலில் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, கடலை மாவு 2 தேக்கரண்டி, ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் முதல் 20 நிமிடம்  வரை முகத்தில் வைத்து கொள்ள வேண்டும். பைம்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் கற்றாழை பேஸ் பேக்:

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் 1 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் 15 நிமிடத்திற்கு  வைத்து கொள்ள வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு: உங்களுக்கு சளி அல்லது நுரையீரல் சம்மந்தபட்ட பிரச்சனை இருந்தால் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை குளிர்ச்சி தன்மை உடையதால் உங்களின் பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.

மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு பேக்:

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 10 நிமிடம் முதல் 12 நிமிடம் வரை முகத்தில் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால்கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் தயிர் பேக்:

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும்.  இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து கொள்ள வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மேல் கூறியுள்ள பேக்கில் ஏதவாது ஒன்றை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மாற்றத்தை காணலாம். அதுமட்டுமில்லாமல் இந்த பேக்குகளில் வாரத்தில் 1 முறை என்று தொடர்ந்து 3 வாரம் பயன்படுத்தி வந்தால் மாற்றத்தை காணலாம்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை