Ulunthu And Tomato Face Pack In Tamil
வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் நாம் வெளியிடங்களுக்கு சென்று வருவதனால் நம்முடைய சருமம் மாசுபடும். இதனால் நாம் நம் சருமத்தை பாதுகாக்க வேண்டும். சருமம் மாசுபடுவதை தடுக்கவும் முகம் பொலிவாக இருக்கவும் நாம் பல்வேறு பேஸ் பேக்களை பயன்படுத்துவோம். பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்திற்கு ஏற்ற செயற்கை பேஸ் பேக்களை கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இது உங்கள் முகத்தை பொலிவாக வைத்தாலும் இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆகவே செயற்கை பேஸ் பேக்களை தவிர்த்து விட்டு நாம் வீட்டிலேயே இயற்கையாக பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம். இயற்கையாக பேஸ் பேக் தயாரிக்க உங்கள் வீட்டில் இருக்கும் உளுந்து மற்றும் தக்காளி என இரண்டு பொருட்களே போதுமானது. எனவே இன்றைய பதிவில் உளுந்து மற்றும் தக்காளி வைத்து இயற்கையாக வீட்டிலேயே பேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாருங்கள்.
உளுந்து மற்றும் தக்காளி பேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
- உளுந்து 1 கப்
- தக்காளி 2
செய்முறை:
- முதலில் 1 கப் உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- அதன் பிறகு தக்காளி 2 எடுத்து, அதை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
- அடுத்து ஊற வைத்த உளுந்தை எடுத்து, அரைத்த தக்காளியுடன் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்தால் முகத்திற்கு தேவையான பேஸ் பேக் ரெடி.
எப்படி பயன்படுத்துவது:
விழுதாக அரைத்து வைத்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அதை உலர விட வேண்டும். பிறகு குளிர்ந்த நேரில் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
பேஸ் பேக் பயன்கள்:
கருவளையம் மறையும்:

இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். மேலும் கருவளையம் மற்றும் கருந்திட்டுகளை நீக்கி சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
சரும வறட்சி நீங்கும்:
இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதனால் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமம் வறட்சி அடைவதை தடுக்கிறது. இது சருமம் பொலிவாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.
சருமத்தை பொலிவாக்கும்:
இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதனால் சரும துளைகளை ஆழ்ந்து சுத்தப்படுத்தி, சருமத்தில் மறைந்திருக்கும் மாசுக்களை நீக்குகிறது. இது சருமத்தை பொலிவாக்குவது மட்டுமில்லாமல் முகப்பருக்கள் உண்டாவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.
உங்கள் சருமம் மிகவும் மோசமானதாகவும் மாசுக்கள் நிறைந்தும் இருக்கிறதா? அப்போ நீங்கள் இந்த பேஸ் பேக்கை கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் முக பொலிவடையும். மேலும் உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனைகளும் நீங்கும்.
Tomato Beauty Tips In Tamil..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |