அக்குள் பகுதி துர்நாற்றம் வராமல் இருக்க இதை பண்ணுங்க

அக்குள் துர்நாற்றம் நீங்க

இன்று எல்லாரும் சந்திக்க கூடிய பிரச்சனை அக்குள் துர்நாற்றம். இது வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தான் பார்க்க போகிறோம். வெளியில் செல்லும் போது என்ன தான் வாசனை திரவியம் அடித்து சென்றால் கொஞ்சம் நேரத்திற்கு வாசனையாக இருக்கும்.  ஆனால் நேரம் ஆக நேரம் ஆக நம் மீது துர்நாற்றம் வந்துவிடும். உடலில் ஒரு பகுதியிலிருந்து வர கூடிய நாற்றம் பக்கத்தில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். துர்நாற்றம் வரும் நபர் அவர்களுக்கே நாற்றம் வரும். இதை வீட்டிலிருந்தே எளிமையாக எப்படி வராமல் தடுப்பது என்று பொதுநலம்.காம் பதிவில் தெரிந்துகொள்வோம்.

குளிக்கும் முறை:

குளிக்கும் முறை

அக்குள் துர்நாற்றத்தை போக்குவதற்கு முதல் படியாக நீங்கள் ஒரு நாளைக்கு  இரண்டு தடவை குளிக்க வேண்டும். இரண்டு தடவை குளிப்பதால் புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ளும். துர்நாற்றத்திலுருந்தும் கொஞ்சம் விடுபடலாம்.

வேப்பிலை பயன்கள்:

வேப்பிலை பயன்கள்

வேப்பிலைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் வேப்பிலையை சிறிதளவு எடுத்து அரைத்து கொள்ளவும். பின் குளிப்பதற்கு 15 நிமிடங்கள் வேப்பிலை பேஸ்ட் அக்குள் பகுதியில் தடவி வைத்திருந்து அதன் பிறகு குளியுங்கள். மற்றும் குளிக்கும் தண்ணீரில் வேப்பிலையை போட்டு குளியுங்கள்.

தேங்காய் எண்ணெய் பயன்கள்:

தேங்காய் எண்ணெய் பயன்கள்

அக்குள் துர்நாற்றத்தை போக்குவதற்கு தேங்காய் எண்ணெய்யை குளித்த பிறகு வந்து தடவுங்கள். இதை தடவும் போது துர்நாற்றம் வராமல் தடுக்கலாம். மேலும் இதனை தொடர்ந்து தடவும் போது அக்குளின் கருமை நிறம் மறைந்து விடும். தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டாலும் அக்குள் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

தண்ணீர் குடிக்கும் அளவு:

தண்ணீர் குடிக்கும் அளவு

தண்ணீர் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலிலுள்ள நச்சுக்களை நீக்குகிறது. இதன் மூலம் உடலில் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்ட்ரியாக்களை தடுக்கிறது. இதனால் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

தக்காளி பயன்கள்:

தக்காளி பயன்கள்

தக்காளியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. அதனால் தக்காளி சாற்றை குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைக்கிறது. தக்காளியை சருமத்தில் தடவுவது உடல் துர்நாற்றம் வராமல் எதிர்த்துப் போராடும். இதனால் வியர்வையை குறைக்க முடியும். தக்காளி சாற்றை அக்குள் பகுதியில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil