நாள் முழுவதும் அக்குள் வியர்வை நாற்றம் வராமல் பிரஷாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..

Advertisement

Underarm Smell Home Remedy in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை தான் வியர்வை நாற்றம். இதனை சரி செய்வதற்காக என்ன தான் வாசனை திரவியம் அடித்து சென்றாலும், கொஞ்சம் நேரத்திற்கு மட்டும் தான் வாசனையாக வைத்து கொள்ளும். நேரம் ஆக ஆக வியர்வை நாற்றம் வர ஆரம்பித்து விடும். அதனால் இயற்கையான முறையில் நிரந்தரமாக வியர்வை நாற்றத்தை போக வைக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

அக்குள் வியர்வை நாற்றம் நீங்க:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உப்பு:

அக்குள் வியர்வை நாற்றம் நீங்க

குளிக்கின்ற தண்ணீரில் உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை பயன்படுத்தி தினமும் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கி விடும்.

ஆப்பிள் சைடர் வினிகர்:

அக்குள் வியர்வை நாற்றம் நீங்க

ஒரு கப்பில் 1/2 கப் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதனுடன் 1 கப் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு அக்குள் பகுதியில் ஸ்ப்ரே செய்து காலையில் எழுந்து கழுவி விடவும்.

எலுமிச்சை சாறு:

அக்குள் வியர்வை நாற்றம் நீங்க

 ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். அதனுடன் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவி 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரை பயன்படுத்தி கழுவவும்.  

எவ்வளவு நேரம் ஆனாலும் வியர்வை நாற்றம் வராமல் இருக்க இந்த Tips மட்டும் ட்ரை பண்ணுங்க..!

தக்காளி சாறு:

அக்குள் வியர்வை நாற்றம் நீங்க

ஒரு பவுலில் எலுமிச்சை சாறு சிறிதளவு, தக்காளி சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை அக்குள் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தினமும் செய்ய வேண்டியது:

வியர்வை நாற்றம் உள்ளவர்கள் தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

அடுத்து நீங்கள் ஆடைகள் இறுக்கமாக அணிவதை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை காட்டன் துணிகளை அணிய வேண்டும். அப்போது தான் உங்களின் வியர்வையை துணி உறிஞ்சுவதனால் வியர்வை நாற்றம் வராமல் பார்த்து கொள்ளலாம்.

அக்குள் கருமையை நீக்க உருளைக்கிழங்கு, தேங்காய் எண்ணெய் முதல் இன்னும் சில டிப்ஸ்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement