ஒரே வாரத்தில் உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க..! Upper Lip Hair Removal Tips At Home..!
Upper Lip Hair Removal Tips: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம் பதிவில் பெண்களுக்கு உதட்டின் மேல் வளரும் தேவையில்லாத முடிகளை 7 நாளில் அகற்ற சூப்பர் ரெமிடி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த ரெமிடி நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அருமையான குறிப்புத்தான். ஆனால் இப்போது உள்ள இளம் தலைமுறையினர் இந்த டிப்ஸை பயன்படுத்துவதற்கு மிகவும் யோசிக்கிறார்கள். செயற்கையான முறையில் பயன்படுத்துவதையே பெரும்பாலான பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். உதட்டின் மேல் உள்ள தேவையற்ற முடி நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த டிப்ஸை பாலோ செய்தால் ஒரே வாரத்தில் உதட்டின் மேல் வளரும் தேவையற்ற முடி நீங்கி முகம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோன்றும். சரி வாங்க இப்போது உதட்டின் மேல் முடி நீங்க எப்படி இந்த டிப்ஸை செய்யலாம் என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
![]() |
உதட்டின் மேல் முடி நீங்க – தேவையான பொருள்:
- கிழங்கு மஞ்சள்
- சுரசுரப்பான இழைக்கும் கல்
- உப்பு
- தண்ணீர்
ஸ்டேப் 1:
மஞ்சளில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய கிழங்கு மஞ்சள்(பூசும் மஞ்சள்) எடுத்து கொள்ளவும். இந்த கிழங்கு மஞ்சளை நாம் அரைத்து தான் உபயோகிக்க முடியும்.
ஸ்டேப் 2:
அடுத்து சுரசுரப்பு தன்மை கொண்ட பாதம் தேய்க்கும் கல்லை எடுத்துக்கொள்ளவும். அந்த கல்லில் தான் மஞ்சளை இழைத்து பயன்படுத்த முடியும்.
ஸ்டேப் 3:
சுரசுரப்பு கல்லில் சிறிதளவு உப்பை எடுத்துக்கொள்ளவும். அந்த உப்பில் ஒன்று அல்லது 2 சொட்டு அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 4:
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்த கல்லில் கிழங்கு மஞ்சளை இழைக்கவும். இப்போது கல்லில் மஞ்சள் நன்கு வெளிப்பட ஆரம்பிக்கும். நன்றாக கல்லில் அரைத்த பிறகு உதட்டின் மேல் வளர்ந்து இருக்கும் தேவையில்லாத முடிகளின் மீது அரைத்த உப்பு மஞ்சளை தடவி வர வேண்டும்.
ஸ்டேப் 5:
உதட்டின் மேல் அப்ளை செய்தால் இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து காலையில் எழுந்தவுடன் முகத்தை வாஷ் செய்துக்கொள்ளலாம். இல்லையென்றால் 30 நிமிடம் கழித்து எதிர்பக்கமாக வைத்து தேய்த்த பிறகு அந்த முடிகள் உதிர செய்யும்.
![]() |
செயல்படுத்தும் முறை:
இந்த டிப்ஸை தொடர்ந்து 7 நாட்கள் பாலோ செய்து வந்தால் நிரந்தரமாக உதட்டின் மேல் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.
மேற்கொண்டும் உதட்டின் மேல் முடி வளராமல் இருக்க வேண்டும் என்றால் 20 முதல் 25 நாட்கள் வரை தொடர்ந்து அப்ளை செய்து வர வேண்டும்.
7 நாட்கள் கழித்து 8ஆம் நாள் தொடர்ந்து செய்கிறீர்கள் என்றால் உப்புவை சேர்க்காமல் செய்யலாம்.
கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சளில் அதிகளவு சக்தி இருக்கிறது. பெண்களுக்கு உதட்டின் மேல் வேகமாக வளரும் தேவையில்லாத முடியினை நீக்கும் சக்தி மற்றும் மீண்டும் வளரவிடாமல் தடுக்க பெரிதும் உதவியாக உள்ளது.
நம் முன்னோர்கள் அனைவரும் இந்த மஞ்சளை முகத்தில் பயன்படுத்தி வந்ததால் தான் இது போன்ற சரும பிரச்சனைகள் வராமல் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருந்தனர். இப்போது உள்ள அனைத்து இளம் தலைமுறையினருக்கும் அனைத்து சரும பிரச்சனைகளும் வருகிறது.
இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த டிப்ஸை பாலோ செய்து வரலாம். சருமத்திற்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.
![]() |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |