வெறும் 5 நிமிடத்தில் முகத்தை பரு இல்லாமல் வெள்ளையாக மாற்றலாமா ஆச்சரியமா இருக்கே..!

urulaikilangu face pack in tamil

முகம் வெள்ளையாக

ஹாய் நண்பர்களே..! முகத்தில் பரு இல்லாமல் முகம் வெள்ளையாக இருக்க என்ன செய்வது என்று பலரும் யோசித்து இருப்பீர்கள். உங்களுடைய யோசனைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய அழகு குறிப்பு பதிவு இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் 1 பொருளை வைத்து வெறும் 5 நிமிடத்தில் முகத்தில் பருவை நீக்கி முகம் வெள்ளையாக மாற்றலாம். இனி உங்களுக்கு செலவும் இருக்காது மற்றும் நேரமும் செலவாகாது. சரி வாங்க முகத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ 30 நாள் challenge முடியை இரண்டு மடங்கு வேகமாக வளர வகைக்கும் ஹேர் ஸ்ப்ரே..!

Urulaikilangu Face Pack in Tamil:

முகப்பரு நீங்க மற்றும் முகம் வெள்ளையாக உருளைக்கிழங்கு Face Pack தயார் செய்ய வேண்டும். அதை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Face Pack தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – 1
  • வைட்டமின் E கேப்சூல் – 1
  • எலுமிச்சை சாறு – சிறிதளவு 

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் 1 உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு சுத்தமான தண்ணீரில் அலசி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கிய உருளைகிழங்கை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் வைய்யுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து உருளைக்கிழங்கு சாறை அதில் ஊற்றி நன்றாக கிண்டிக்கொண்டே இருங்கள். அதன் பின்பு பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதனை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விடுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் ஆறவைத்துள்ள பேஸ்ட், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 1 வைட்டமின் E கேப்சூலில் உள்ளே இருக்கும் மருந்து இவை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் Face பேக் தயார்.

ஸ்டேப்- 4

இப்போது நீங்கள் தயார் செய்த உருளைக்கிழங்கு Face பேக்கை உங்களுடைய முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். அதன் பிறகு உங்கள் முகத்தை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் அந்த அளவிற்கு அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த கற்றாழை மட்டும் போதுமா ஆச்சரியமா இருக்கே

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil