வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Beauty parlour சென்று Facial போட முடியலன்னு கவலைப்படாதீங்க..! ஏனென்றால் வீட்டிலேயே Facial போடலாம் வாங்க.!

Updated On: October 27, 2023 11:52 AM
Follow Us:
face pack at home in tamil
---Advertisement---
Advertisement

வீட்டிலேயே பேசியல் செய்வது எப்படி.?

பெண்கள் தங்களை அழகுபடுத்துவதில் ஆர்வம் அதிகமாக காட்டுவார்கள். அதற்காக காசு செலவும் செய்வார்கள். அதிலும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழா நாட்களில் ஏற்படும் செலவு இல்லாமல் இவர்கள் Parlour-க்கு என தனியான செலவு செய்வார்கள். சில பெண்களுக்கு Parlour-க்கு செல்ல நேரம் இருக்காது. வேலைக்கு சென்று வந்ததும் ஓய்வு எடுத்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கும்  Parlour சென்று மேக்கப் போட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இனி அவர்கள் Parlour செல்லாமலே வீட்டில் இருந்து சூப்பரா மேக்கப் போடலாம் வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ 1 ரூபாய் செலவு செய்யாமல் வீட்டிலையே முகத்தை தங்கம் போல் மின்ன வைக்கலாம்..!

பேஸ் பேக் எப்படி.?

ஸ்டேப்:1

முதலில் Facial போடுவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி கொள்ளுங்கள். பிறகு ஒரு காட்டன் துணியால் ஈரம் இல்லமால் துடைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி பால், லெமன் ஜூஸ் 1 தேக்கரண்டி சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு கலந்து வைத்த இரண்டு கலவையும் முகத்தில் அப்ளை செய்யுங்கள். 2 நிமிடம் வரைக்கும் வைத்திருந்து முகத்தை துடைத்துவிடுங்கள்.

ஸ்டேப்:2

பின் 1 தேக்கரண்டி காபி தூள், 1 தேக்கரண்டி தேன், ரோஸ் வாட்டர் சிறிது சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். பின் இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின் 10 நிமிடம் வரைக்கும் முகத்தில் வைத்திருங்கள் பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

ஸ்டேப்:3

அடுத்து ஆவி பிடியுங்கள். ஆவி பிடிப்பதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி விடும்.

ஸ்டேப்:4

அடுத்து ஒரு பவுலில் கடலைமாவு 1 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி, சந்தன பவுடர் 1 தேக்கரண்டி, தக்காளி சாறு ஊற்றி நன்றாக கலக்கவும். பேஸ்ட் போல் வர வரைக்கும் நன்றாக கலக்கவும். பின் இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இந்த பேஸ் பேக் 20 நிமிடம் வரைக்கும் முகத்தில் அப்படியே இருக்கட்டும். பின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

ஸ்டேப்:5

இப்போ பாருங்கள் உங்கள் முகத்தை பார்லர் சென்று வந்தால் கூட இந்த அளவுக்கு பளபளப்பு இருக்காது. அந்த அளவுக்கு முகம் பளபளப்பாக இருக்கும். பார்லர் சென்று அதிக பணம் செலவழிக்காமல் வீட்டிலேயே சூப்பரான பேஸியல் செய்து பாருங்கள். ஒரு தடவை செய்துபாருங்கள் பிடித்திருந்தால் Follow பண்ணிக்கோங்க நண்பர்களே..! இத்துடன் இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன். வேறொரு பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.!🙏

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now