வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி உதிர்வதை நிறுத்தி முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த ஒரு பொருள் போதும்..!

Updated On: December 19, 2022 8:50 AM
Follow Us:
vendhayam hair pack in tamil
---Advertisement---
Advertisement

வெந்தயம் ஹேர் பேக்

தலை முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரின்  ஆசையாக இருக்கிறது. இதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் தலைமுடிக்கும் சரி, உடல் ஆரோக்கியத்திற்கும் சரி தீங்கினை விளைவிக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

ஹேர் பேக் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • வெந்தயம் – முடிக்கு தேவையான அளவு
  • தேங்காய் – சிறிதளவு
  • பாசிப்பயிறு – முடிக்கு தேவையான அளவு 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl

ஹேர் பேக் செய்முறை:1

வெந்தயம் ஹேர் பேக்

உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயம் எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.  மறுநாள் காலையில் மிக்சி ஜாரில் ஊறிய வெந்தயம், தேங்காய் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

வெந்தயம் ஹேர் பேக்

அரைத்த  பேஸ்ட்டை வடிக்கட்டி எடுத்து கொள்ள வேண்டும். வடிக்கட்டிய பேஸ்ட்டை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். பிறகு தலையை அலச வேண்டும்.

ஹேர் பேக் செய்முறை -2

vendhayam hair pack in tamil

உங்கள் முடிக்கு தேவையான அளவு பச்சை பாசிப்பயிறு, வெந்தயம் எடுத்து ஊற வைத்து கொள்ளவும். தேங்காய் 2 துண்டு எடுத்து கொள்ளவும்.

பிறகு மிக்சி ஜாரில் ஊற வைத்த பாசிப்பயறு, வெந்தயம், தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும். நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.  பின் அரைத்த பேஸ்ட்டை வடிக்கட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த பேக்கை அப்ளை செய்வதற்கு முன் தலை முடியை சிக்கு இல்லாமல் எடுத்து கொள்ளவும். பிறகு இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளவும்.

பின் இந்த பேக்கை முடிக்கு அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து தலையை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி அலசி கொள்ளவும். தலையை தேய்க்கும் போது தலையை சுரண்டி சுரண்டி தேய்த்து குளிக்கவும்.

இந்த பேக்கில் சேர்க்கப்பட்டிற்கும் பொருட்கள் அனைத்தும் முடி உதிர்வை நிறுத்தி, முடியை வளர செய்யும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள் ⇒ முடி நீளமா அடர்த்தியா வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு எண்ணெய் சேர்த்து தலையில் தடவி போதும்!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை