வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்யுங்க..!

Advertisement

வியர்வை நாற்றம் நீங்க | Viyarvai Natram Neenga in Tamil 

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி வியர்வை நாற்றம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளித்தாலும் வியர்வை நாற்றம் ஏற்படுகிறது. சில நபர்களுக்கு குளித்த சில நேரங்களிலே வியர்வை நாற்றம் ஏற்படும்.

இதற்காக கடைகளில் விற்கும் செண்டை வாங்கி அடிப்பார்கள். நீங்கள் என்ன தான் விலை உயர்ந்த செண்ட் வாங்கி அடித்தாலும் சில நேரங்களில் அதனின் வாசனையும் போய் வியர்வை நாற்றம் ஆரம்பிக்கும். இதனை நிரந்தரமாக வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி தடுப்பது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

Underarm Smell Home Remedies in Tamil:

இரண்டு தடவை குளிக்க வேண்டும்:

Underarm Smell Home Remedies in Tamil

 வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு முதல் படியாக நீங்கள் ஒரு நாளைக்கு  இரண்டு தடவை குளிக்க வேண்டும். இரண்டு தடவை குளிப்பதால் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். துர்நாற்றத்திலுருந்தும் கொஞ்சம் விடுபடலாம். 

ஆடை அணியும் முறை:

அடுத்து அக்குள் பகுதியில் முடி இல்லாமல் சேவ் செய்திட வேண்டும். அக்குள் பகுதியில் முடி இருந்தாலும் வியர்வை நாற்றம் ஏற்படும். அடுத்து டிரஸ் டைட்டா போட கூடாது. அந்த இடத்தில் காற்று போகின்ற அளவிற்கு இடைவெளி இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ அதிக வியர்வை வர காரணம்

எலுமிச்சை பழம்:

Underarm Smell Home Remedies in Tamil

நீங்கள் குளிப்பதற்கு முன்னாடி எலுமிச்சை பழத்தை வியர்வை நாற்றம் அடிக்கும் பகுதியான அக்குள் பகுதியில் தடவ வேண்டும். பிறகு குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

குளிக்கும் தண்ணீரில் எலும்பிச்சை சாறு, உப்பு, கஸ்தூரி மஞ்சள்  கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரில் தினமும் குளியுங்கள். விரைவிலே வியர்வை நாற்றம் நீங்கி விடும்.

வேப்பிலை:

Underarm Smell Home Remedies in Tamil

வேப்பிலைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் வேப்பிலையை சிறிதளவு எடுத்து அரைத்து கொள்ளவும். பின் குளிப்பதற்கு 15 நிமிடங்கள் வேப்பிலை பேஸ்ட் அக்குள் பகுதியில் தடவி வைத்திருந்து அதன் பிறகு குளியுங்கள். மற்றும் குளிக்கும் தண்ணீரில் வேப்பிலையை போட்டு குளியுங்கள். இதனால் வியர்வை நாற்றம் வராது.

இதையும் படியுங்கள் ⇒ நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருக்க இதை Follow பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement