வியர்வை வராமல் இருக்க இதெல்லாம் பண்ணுங்க..!

Viyarvai Varamal Iruka

வியர்வை வராமல் இருக்க

பொதுவாக நம்முடைய உடலில் ஏதாவது பிரச்சனை இல்லாமல் இருக்காது. ஏதாவது பிரச்சனை வந்துகொண்டு தான் இருக்கும். அதாவது தலை முடி நீளமாகவும், அடர்தியாக வளர வேண்டும் என்று ஏதாவது பெண்கள் முதல் ஆண்கள் வரை சொல்லிக்கொண்டு தான் உள்ளார்கள். அதேபோல் வெயில் காலம் வந்துவிட்டால் உடலில் அதிக வேர்வை வந்துகொண்டு தான் இருக்கும். இதற்கு என்ன தான் நாம் செய்ய முடியும் என்று சிலர் கேட்பார்கள்.

அதேபோல் இந்த வேர்வை வந்தால் நல்ல ஆடைகள் கூட போட முடியாது. அதேபோல் பக்கத்தில் யாரும் நிற்கவே முடியாது. அதனுடைய வாடையானது மேலும் வந்துகொண்டு தான் இருக்கும். இதற்கு நாம் என்ன தான் செய்ய முடியும். அதனால் இந்த வேர்வையானது வராமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வியர்வை வராமல் இருக்க | Viyarvai Varamal Iruka:

டிப்ஸ்: 1

நம்மில் அதிகமாக முகத்தில் தலையில் வேர்வை வருவதை விட அக்குளில் தான் வேர்வை அதிகம் வருகிறது. ஆகவே அதற்கு எளிமையான வழிகளை வைத்து குறைக்கலாம். அதாவது நம்முடைய வீட்டில் பேக்கிங் சோடா இருக்கும். அதனை கொஞ்சம் எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து அக்குளில் தடவிக்கொள்ளவும். 30 நிமிடம் கழித்து கழுவிக் கொண்டால் உங்கள் அக்குள் வறட்சியாக இருக்கும். வியர்வை ஏற்படாது.

டிப்ஸ்: 2

 வியர்வை நாற்றம் வராமல் இருக்க

இரவு தூங்குவதற்கு முன்பு ஆப்பிள் வினிகரை அக்குளில் சிறிது அப்ளை செய்யவும். அல்லது குளிக்கும் முன்பு அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து குளிக்கலாம். இப்படி செய்வதால் அதிகமாக வியர்வை வருவதை தடுக்கலாம்.

தலையில் இருக்கும் போடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க 

டிப்ஸ்: 3

 வியர்வை வராமல் இருக்க

அக்குளில் சிறிது சோளமாவு அப்ளை செய்யலாம். இப்படி செய்வதால் நல்ல மாற்றம் இருக்கும். ஏனென்றால் இதனை நாம் பவுடர்க்கு பதிலாக தான் அப்ளை செய்கிறோம். ஆகவே இது அக்குளில் வியர்வை வராமல் தடுகிறது.

டிப்ஸ்: 4

எலுமிச்சை பழம்

எலுமிச்சை சாறுக்கு நிறைய சக்திகள் உள்ளது. அதாவது எலுமிச்சை சாறை சிறிது அப்ளை செய்து குளிப்பதால் உடலில் அதிகமாக வியர்வை வருவதை தவிர்க்கலாம். அதேபோல் அக்குள் கருமை நீங்கும்.

டிப்ஸ்: 5

அதிகமாக காரம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். அதுபோல் அதிகமாக வியர்வை வருபவர்கள் குடைமிளகாய், பச்சை மிளகாய் உணவில்  சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

மேலும் காட்டன் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்கள். அப்போது தான் உடலில் அதிக வியர்வை ஏற்படாது.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்